பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 Ti இசைக் கலையிலும், தமிழ் யாப்பிலும் சிறந்து விளங்கிய இசைச் கலைஞர்களையும் தமிழ்ப் புலவர் களையும் வரவழைத்து, அவர்களது திறமைகளைத் தேர்ந்து பாராட்டிப் பெரும் பரிசில்களை வழங்கிச் சிறப்பித்து வந்தார். குன்றக்குடி கிருஷ்ண ஐயர், பட்டணம் மகா வைத்தியநாத பாகவதர், இராமசாமி சிவன் முதலிய ஈடு இணையற்ற இசை மேதைகள் இந்த மன்னரது அருங்கொடையைப் பெற்று அகம் மகிழ்ந் த னா, குறிப்பாக, மகா வைத்தியநாத பாகவதரும் அவரது தமையனார் இராமசாமி சிவனும் சேது மன்னரால் அடிக்கடி சிறப்பிக்கப்பட்டு வந்தனர். வழக்கமாக அளிக் கப்படும் பரிசில்களுடன் , இந்த இரு பெருங் கலைஞர் களும், வாழ்நாளெல்லாம் சிறப்பாக வாழ்ந்து, இசைக் கலைக்கு உயர்ந்த சேவை செய்வதற்கென்று நிரந்தர மான அறக்கட்டளை யொன்றையும் மன்னர் அவர் களுக்கு ஏற்படுத்தி மகிழ்ந்தார். ஒருமுறை, இந்த புலவர் பெருமக்கள் இராமநாதபுரம் அரண்மனையில் மன்னரின் விருந்தினர்களாகத் தங்கி இருந்தனர். அப்பொழுது மன்னர், அவர்களிடம், 'கந்தபுராணம்' பற்றிய சிறப் புக்களை தெரிவித்ததுடன், அந்த நூலின் பிரதியொன் றையும் அவர்களுக்கு அளித்தார். சில நாட்களில், அந்த இலக்கியத்தைப் பாமரரும் அறிந்து சுவைக்கும் வண்ணம் கந்தபுராண கீர்த்தனைகள்' என்று இசை இலக்கிய மாக இராமசாமி சிவன் பாடி முடித்தார். இதனை அறிந்த சேதுபதி மன்னர் அவரை "சாகித்யப் புலி’ எனப் பாராட்டிச் சிறப்பித்தார். திரி சிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், முதுகுளத்தார் சதாவ தானி சரவணப் பெருமாட் கவிராயர், பழநி மாம்பழ கவிச் சிங்கப் புலவர், சென்னை சந்திரசேகர கவிராஜ பண்டிதர் ஆகிய இயற்றமிழ்ப்புலவர்களும் இந்த மன்ன ரால் சிறப்பிக்கப்பட்டவர் ஆவர். புலவர்களும் இந்தப் புரவலரைப் பாராட்டிப் பெருமிதத்துடன் பாடினர்.