உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அருளாளன் அருளாளன் கண்மணிகண் மணிபூதி அமைந்த பூதி வெருளாத சிவசமயஞ் சிவசமயம் என்றியிலும் மேன்மை பூண்ட தெருளாளா முகவையிற்பாஸ் கரசாமிச் சேதுபதிச் செல்வா இன்று பொருளாரும் குனதிசை நின் றுறலின றிந் தேனின் பேர்ப் பொருளி தென்றே (23) (கட்டளைக் கலித்துறை) நின்னாட்டை ஆண்ட வரகுண தேவரிந் நீள்பதியில் அந்நாள் இருந்தர சாண்டனர் என்பர் மற் றகையினால் இந்நாள் இதனிடை நீயுறல் சால இயைபுடைத்தே எந்நாடும் போற்றுறு பாஸ்கர சாமி இறையவனே. (24) (அறுசீர்க் கழிநெடிலடு ஆசிரிய விருத்தம்) வலம்பூத்த இடைமருதம் வாழ்ந்தருளும் பெருங்கருணை வாரி தன்னை நலம்பூத்த புகழ்மிகு பாஸ் கரசாமி சேதுபதி நரேந்தி ரன்றான் 23. அருளாளன் அருளாளன்-அருளாகிய சக்தியை ஆள்பவனே கிருபையையுடைய கட்வுள், கண்ம்ன கண் மணிருத்திராட்சமே கண்ணிலுள்ள மணியைப்போன்றது பூதி அமைந்த பூதி - விபூதியே பொருத்தமான செல்வம். சிவ சமயம் சிவ சமயம்-சிவனை வழிபடும் சமயமே மங்கலமான சமயம் குணதிசை-கிழக்கு, கிழக்கிலிருந்து வருதலால் சூரியன் என்னும் பொருளையுடைய பாஸ்கரன் என்பதன் பொருளைத் தெரிந்து கொண் டேன். 24. இந்நீள் பதி என்றது திருவிடைமருதூரை இயைபு பொருத்தம்,