பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாள் தோறும் பகலுணவு கொள்ளும் மகேசுவர பூசையின் பொழுது, "காவிரி நீரும், சேதுபதி மன்னர் அன்னமும், ஆவுடையப்பர் நிழலும் என்றும் உடையோம்' என நினைத்து வழுத்தத் தவறுவதில்லை இந்தக் காரணங். களினால் அப்பொழுது இருந்த ஆதீன கர்த்தர் அம்பல் வான தேசிகர் இளம்பாஸ்கரருக்கு தமது திருமடத்தில் சிறந்த வரவேற்பு வழங்கி ஆதினத்து நூ ல் நிலையத்தை திறந்து வைக்குத் சிறப்பையும் நல்கினார். இந்த நூல் நிலையம் தமிழ்ப் பேரறிஞர் உ. வே. சாமிநாதையரது ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பல இலக்கியச் சுவடி களைக் கொண்ட வித்தியாநிதி' எனப் பெயர் பெற்றதாகும். பின்னர் தஞ்சைத் தர ணிக்குச் சென்ற இளவல் பாஸ்கரர். நாகூருக்கும் நாகைப்பட்டினத்திற்கும் சென்றார். தமிழ. கத்துச் சமய வாழ்க்கையின் சாளரங்களைப் போன்று சிறந்த, அந்தத்தலங்களை அவர் தரிசிக்க விழைந்ததில் வியப்பில்லை. அப்பொழு க. நாகைப்பட்டினத்தில் இருந்து வெளியிடப்பட்ட இல கியத்-திங்கள் வெளியீடான 'நீலலோசனி’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு. சதாசிவம் பிள்ளை, இவரது பத்திரிக்கை அலுவலகத்தில் மன்னருக்கு வரவேற்பு ஒன்றையும் நல்க விழைந்தார். தமிழ் வேந் தரைச் சிறப்பிக்க வேண்டும் என்ற பேரார்வத்தை மன்னரிடம் வெளியிட்டார். அவரது விருப்பத்தைப் பூர்த்திசெய்ய மன்னர் நீல லோசனி அலுவலகத்திற்கும் சென்றார். சதாசிவம் பிள்ளை எய்திகைஇந்சசிக்கு எல்லை இல்லை. சைவத் தலங்களை தரிசிப்பவர்கள், திருக்கோயிலில் உள்ள சண்டேசுவரரையும் தரிசித்தால்தான் பக்தர்களது தரிசனம் நிறைவு பெறும் என்பது ஐதிகம். அதைப்போல் காசி ராமேசுவர யாத்திரையை மேற்கொள்பவர்கள். இறுதியில் இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் 5. மகா வித்வான் ரா. ராகவ ஐயங்கார் - சேது நாடும் தமிழும் (1931). 6. தினமலர் (நாளிதழ் - நெல்லை) - 8-2-1984.