பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 25 போன்ற அன்றாட நிகழ்ச்சிகளுக்குச் செலவு செய்யப் பட்ட விபரங்களையும் இந்த பதிவேடு தருகிறது. இத் தகைய ஆவணங்களும் மன்னரது ஏனைய பதிவுகளும் முழுமையாக கிடைத்திருந்தால் மன்னரைப் பற்றியும், அன்றைய அரிய நிகழ்ச்சிகளையும் இன்னும் அதிக மாகத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். காலத்தின் கனிவு கிட்டவில்லை. எனினும் கிடைத்த ஆவணங்கள் , செய்திகள் தொகுப்பாக இந்த தொகுப் புரை தொடர்கிறது.

  • A k.

பருவமுற்ற பிள்ளைகளுக்குத் தக்க துனையைத் தேர்வு செய்து மன வினையை முடித்து வைக்க விரும்பு வது பெற்றோர் இயல்பு. அழகும் அறிவும் மிகுந்த இளைஞர் பாஸ்கரருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார் அவரது தயார் முத்தாத்தாள்டநாச்சியார். இராமநாதபுரம் சமஸ்தான ஆட்சிப் பொறுப்பு. கும்பெனித் துரைத்தனத்தாரிடம் அப்பொழுது இருந்து வந்ததால், அவர்களது அனுமதியைப் பெற ராணியார் முயன்றார். இளம் பாஸ்கரரது இனிய கல்விக்கு மணவினை இடையூறாக இருக்கு மென்று கருதப்பட்ட தால் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், கி.பி. 1888ம் வருடம் மே திங்களில் இளவரசர் பாஸ்கரர் எப்.ஏ. பட்டத் தேர்வில் தேர்வு பெற்றபிறகு அரசாங்கத் தார் பாஸ்கர ரது திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர். அத்துடன் சமஸ்தான நிதியில் இருந்து திருமணச் செல விற்காக ஐம்பது ஆயிரமும் ஒதுக்கீடு செய்தனர். ஆனால், ராணியார் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து பாஸ்கர சேதுபதி திருமணத்தை 13-5-1888-ல்-ஆடம்பர աոտ நட் த்தி வைத்தார். மன்னரது வாழ்க்கைத் துணை 下ーエーニト + - -- - யாக வந்தவர். களரி கிராமம் சேது ராஜாத் தேவர் மகள் மங்களே சுவரி-நாச்சியார் ஆவர். இந்தச் சிறப்பான திருமண நிகழ்ச்சியை கவிஞர் ராமலிங்கம் என்பவர் 8. இந்தப் பதிவேடு இந்த நூலாசிரியரால் கண்டுபிடிக் கப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று ஆவணக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.