பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வந்தனர். அதனால், அந்தத் தொன்மையான சேதுபதி மன்னர் பரம்பரையின் பிரதிநிதியாக தாமும் இருக்க வேண்டும் என்ற பேரவாவினால் குறிப்பிட்ட ச்ட்ட வரம் பிற்குட்பட்ட, குறைந்த நிதி வசதியுடைய ஜமீன்தார் என்பதை அவர் மறந்தார் குடிமக்களுடைய தேவை களையும், தமது வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கரு தும். பல செயல்களையும் நிறைவேற்றி வைக்கத் துடித் தார். அவர் புகழுடம்பு பெறுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் தமது இருபத்து ஐந்தாவது வயதில் அவர் வரைந் துள்ள நாட்குறிப்புகள் இந்தப் பேருண்மையைப் புலப் படுத்துகின்றன. ★ 大 大 1893 வது ஆண்டு ஜனவரித்திங்கள் பதின்மூன்றாவது நாள். பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் பூரித்து மகிழ்வது வழக்கம் ஆனால், பாஸ்கர சேதுபதி மன்ன ரைப் பொறுத்தவரை அவரது சிந்தனை பொங்கலுக் கும் மேலாக பொங்கி வழிந்தது என்பதனை அவரது அன்றைய நாட்குறிப்பில் பதிவுகள் சொல்லுகின்றன. தமது எஞ்சிய வாழ்நாளில் குறைந்தது முப்பத்து மூன்று சாதனைகளையாவது செய்து முடிக்க இறைவனிடம் அன்று வேண்டிக் கொண்டார், அவையாவன, 0 தமிழின் வளர்ச்சிக்காக தமிழ்ச்சங்கம் ஒன்றை s --~~ நிறுவுதல். O குறைந்தது பன்னிரண்டு தமிழ் நூல்களையும், பன்னி ரண்டு வடமொழி நூல்களையும் ஏட்டுச்சுவடிகளில் இருந்து அச்சேற்றி வெளியிடுதல். 0 மேற்படிப்பிற்கு செல்லும் நீண்டத்தகாத மாணவர் களுக்கு சென்னை, மதுரை, ஆகிய பெருநகர்களில் தங்கும் விடுதிகளை அமைத்தல். 0 தம்மைப் பெற்றுவளர்த்த அன்புத்தா யாருக்கு மாத்ரு கருமங்கள் (இறுதிச்சடங்குகள்) செய்யும் வாய்ப்பைப் பெறுதல். -