பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாற்றமாக, இளமைத்துடிப்பும் இறையுணர்வும் மிக்க இலட்சிய மனிதனாக விளங்க வேண்டும் என்ற அற்புத வடிவமாக மன்னர் விளங்கினார். இனிய சாதனைகளுக்கு ஏற்ற களம் இளமைக்காலம் என்பதை மன்னர் உணர்ந்தார். அத்துடன் 'அன்றறி வாம் என்னாது அறம் செய்க" என்ற வள்ளுவத்தை அறிந்தவர் அல்லவா ? ஆற்றொழுக்குப் போல ஒருவர் பின் ஒருவராக நாள்தோறும் தம்மை நாடி வருகின்ற நாவலர்கள், நல்லிசைப் புலவர்கள், கலைஞர்கள், வறு மையையும் சிறுமையையும் வாழ்க்கைச் சுமையாகக் கொண்ட பல திறப்பட்ட மக்கள் ஆகிய அனைவரையும்: காலமெல்லாம் தாங்கும் ஆலமரமாகவே அவர் காட்சி அளித்தார். நொந்து வந்தவர் யாராக இருந்தாலும், அவ ரது சிந்தை குளிர தமது செழுங்கரங்களால் பொன்னை யும் பொருளையும் அள்ளி அள்ளி வழங்கி அகம் மகிழ்த் தார். ஆய்ந்து சிவந்த அவரது ம.ஸ் ளத்தைப் போல அவ ரது கரங்களும் ஈந்து வெந்தன. ஏழைகள் திருமணம் கல்விக்கூடம், கலாசாலை மாணவர் விடுதி, மேல்படிப்பு வசதி, பத்திரிகை, கோயில் கட்டளை, திருப்பணி, திரு விழா, திருமேனி, அங்கி உற்சவம், வாகனம் என்பன போன்ற அறப்பணிகளுக்கான கோரிக்கைகள் எத்தனை வந்தாலும் அவை அத்தனையையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு மன்னரது நெகிழ்ந்த மனமும், நிறைந்த கரங்களும் துணை நின்றன. இவை போன்று, இன்னும் தேசிய காங்கிரஸ்-க்கு ரூபாய் பதினாராயிரம், சென்னை கிறித்துவக் கல்லூரி யில் மாணவர் விடுதியும் உயர்நிலைப் பள்ளியும் அமைக்க ரூபாய் நாற்பது ஆயிரம், முகவையில் இண்டப்படா தோர் குழந்தைகளின் கல்விக்கு ரூபாய் பதினாறாயிரம், மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனைக்கு ரூபாய் ஆறாயிரம், மதுரை யூனியன் கிளை நூலக கட்டிட அமைப்பிற்கு ரூபாய் ஐயாயிரம், மதுரை உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் மூவாயிரம்-இப்படிச் சேதுபதி மன்ன ரது நன்கொடைப்_பட்டியல் நீண்டு கொண்டே செல்