பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில் திவா னும் இந்த நகைக் கடனை உறுதி செய்து இருந்தார். பின்னர் ஏற்பட்ட இரு கடன் பாக்கிகளுக்கு இந்த நகை கள் ஈடாகக் காண்பிக்கப்பட்டு இருந்தன. மன்னரது மறைவை அடுத்து சமஸ்தானாதிபதியான முத்துராம லிங்க இராஜேஸ்வர சேதுபதியின் காலத்தில் தேவ கோட்டை எம்-ஆர்டனம்-உஇராமனாதன்டவிகட்டியர் என்பவர் இந்த நகைக்கடன் பற்றி வழக்குத் தொடர்ந் தார். இளம் ஜமீன்தாரது நலன்களைக் காப்பதற்காக ஆட்சிக் குழுத் தலைவராக நியமனம் பெற்ற தி வான் , தமது அதிகார நிலைக்குப் புறம்பாக நடந்து கொண் டிருப்பதாக, கடனை மறுத்து எதிர் வழக்கு தொடரப் பட்டது. பல சட்டப் பிரச்சினைகள் தோன்றின என்றா லும், கடன்களுக்கு ஒன்று வட்டி வீதம் கொடுத்து நகை களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டபொழுது, முதல் கடன் தாரரான கானாடுகாத்தான் செட்டியார் நகை கள் அனைத்தையும் நிலுவை பாக்கிக்காக ஏற்கனவே ரூ. 2, 80,000/-க்கு விற்பனை-செய்து விட்டார், மீண்டும் சிக்கல்கள், வழக்கு, சென்னை உயர்நீ திமன்றம், லண்டன் பிரிவு கவுன்ஸில் ஆகியவைகளின் பரிசீலனைக்குச் சென் றது. முப்பத்தைந்து ஆண்டு கால நிலுவைக்குப்பின்னர் 1935ல் வழக்கு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு இறுதி வெற்றியை வழங்கி முடிவுற்றது. என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. அவசர நெருக்கடியைச் சமாளிக்க, தற் காலிகமாகச் செய்த ஏற்பாடு, இத்தகைய நீண்ட வரலாறு படைத்தது விந்தைதான். .தங்கமலையைப் பவுனாக்கி சந்திரன் சார் கிரியை துங்கம் பொருந்திய ரூபாயாக்கிச் சொரிந்திடினும் திங்கள் குடைதங்கும் பாஸ்கர பூபன் செழுங்கமல. செங்கைக்கு பற்றுமா கண நேரச் செலுவினுக்கே! * சிலத்தவ மறையோர் வருண செபம் செய்யினும் கோலக்கரு முகில் பெய்யும் பெய்யாது குகனை எண்ணிக்க == 11) Seshadri – Dr - Setupatis of Ramnad (1972) (un Published Thesis)