பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 பாலத்தி ல் நீறணி பாஸ்கர சேதுபதி கைமுகில் தாலத்தில் எந்நேரத்திலும் பெய்யும் தன மழையே! 'ஆலயம் சீராமா அரும்புலவர் வாழ்வாரா காலமெல்லாம் தருமம் தழைக்குமா-ஞானச் சாந்தகுணச் சேதுபதி தன் மரபிற் பாஸ்கரனாம் வேந்தன் பிறவா விடில்'. என்ற இந்த மூன்று பாடல்கள் பாஸ்கர சேதுபதி மன்னரது கொடைப் பண்பைத் தெளிவாக அறுதியிட்டுச் சொல்கின்றன. கலியுகக் கர்ணனாக, செம்பி நாட்டுச் சீதக்காதியாக வாழ்ந்த இந்த மன்னரது வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளையும் இங்கு இணைத்துச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சென்னை உயர்நீதி மன்றத்தின் நடுவராக இருந்து புகழ்பெற்ற ஸர். டி.எ.ஸ்டமுத்துச்சாமி ஐயர் வசதியற்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். நாள்தோறும் இரவு நேரங்களில் தெரு விளக்குக் கம்பங்களின் அடியில் அமர்ந்து, அந்த வெளிச்சத்தில் படித்துப் பட்டம் பெற்று, பின்னர் தென்னைடஉயர்நீதிமன்றத்தின்டரீதி. மானாகும் தகுதி பெற்றவர். கடும் உழைப்பால் உயர்ந்து கல்வியால் சிறந்த இவர் இறந்த பொழுது, மன்னர் மிகவும் துயருற்றார். காசியிலும், சிதம்பரத்திலும், இராமேசுவரத்திலும் உள்ள தமது நிர்வாகப் பிரதிநிதி களுக்கு தந்திச் செய்திகள் அனுப்பி அந்த திருத்தலங் களில் மறைந்த முத்துச்சாமி ஐயரது ஆத்ம சாந்திக்காக சில சடங்குகளைச் செய்து முடிக்குமாறு செய்தார். அத்துடன், காசியில் ஐந்து அந்தணர்கள் கங்கையில் நீராடி ஐயருக்காக சில பிதிர்க்கருமங்களை நிறைவேற்றி வைக்குமாறும், இந்தச் சடங்குகள் தொடர்பாக ஒரு பசுவை வாங்கி காசி அன்னபூரணி ஆலயத்திற்கு வழங்கு மாறும் செய்தார். மேலும், சென்னையில் மறைந்த அந்த நீதிபதியின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்ன அமைப்புச் செலவின் பெரும்பகுதியை மன்னர் அன்புடன் வழங்கி உதவினார். உழைப்பால் உயர்ந்த உத்தமரான முத்துச் சாமி ஐயரது திருவுருவிலாட்டைஅந்த 12. Madurai Mail - 2–?-1985