பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 என்ற கேள்வியுடன் தொடங்கும் அந்தக் ர்ேத்தனம், மன்னரும் மற்றவர்களும் அதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. வித்வான் நிரவல் செய்து வாசிப்ப தற்கு ஏற்றவாறு எளிமையாகவும், ரசிகர்களது உள்ளத் தை ஈர்க்கும் வகையில் வியப்பு, ஏளனம், போன்ற உணர்வு களை உள்ளடக்கியதாகவும் அந்தக் கீர்த்தனம் அமைந்து இருந்தது. அதனால் வித்துவானது வாசிப்பை மன்னர் மிகவும் அனுபவித்துச் சுவைத்தார். பரிசிலை வழங்கி வயலின் வித்வானைப் பாராட்டும் பொழுது, அவர் வாசித்த ர்ேத்தனம் தமது பரிசிலை விடப் பன்மடங்கு பெருமதிப்பு வாய்ந்தது என்பதை சொல்லி தமது மகிழ்ச் சியைத் தெரிவித்தார். பாபநாச முதலியார் என்ற இசைப் புலவர் எழுதிய அந்தக் கீர்த்தனத்தை முழுவது மாக அந்த வித்துவானிடம் இருந்து எழுதிவாங்கி, அச் சிடச் செய்து, தர்பாருக்கு வரும் இசைக் கலைஞர்களுக் கெல்லாம் அதனை க் கொடுத்துப் பாடுமாறு செய்து அந்தக் கீர்த்தனத்தை மிகவும் ரசித்ததுடன் பிரபலப் படுத்தினார் . இன்னொரு முறை, மைசூர் சமஸ்தானத்தில் சிறந்து விளங்கிய வீணை வித்துவான் சேஷண்ணாவை இராம நாதபுரத்திற்கு வர வழைத்து தமது தர்பாரில், அவரது வினைக் கச்சேரி நடப்பதற்கு ஏற்பாடு செய்தார். வித்துவானும் மன்னர் மீது தில்லானா ஒன்றை அமைத்து இசைத்தார். அவரது இசைப் புலமையை மன்னர் பாராட்டிச் சிறப்பித்ததுடன் அவருக்குப் பதி னாயிரம் வெண் பொற் காசுகள் வழங்கி கனகாபிஷேகம்’ செய்து மகிழ்ந்தார். மைசூர் மன்னர் கூட வழங்காத இந்தச் சிறப்பினால், சேஷண்ணா சிந்தை மகிழ்ந்து நெகிழ்ந்து போனார். _ இவ்வாறு அந்தக் காலக் கட்டத்தில், கர்நாடக இசை யில் சிறப்புற்றுத் திகழ்ந்த இசைக் கலைஞர்கள் அனை வரும் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் தங்களது திறமை யைக் காட்டி அரச முத்திரை” பெற்றுச் செல்வது _ 17. The Hindu - 7-6-1970