பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மாக அவரது சொற்பொழிவு அமைந்து இருந்தது. இந்துச் சமயத் தத்துவங்க்ளிலும் அவற்றில் பொதிந் துள்ள உண்மைகள் பற்றிய தெளிவினை அறிய இந்திய நாட்டுப் பெருநகரங்கள் அனைத்தும் இந்த அரசரை அழைத்து-அவரது சொற்பொழிவைக்-கேட்டல் வேண் டும். இது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம்" என்க் குறிப்பிட்டுள்ளார். . சிதம்பரத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளைப் பற்றி தமது தமையனார் பாண்டித்துரைத் தேவருக்கு வரைந்த கடிதத்தில், "நான் முந்தின நாளில் செய்த இரண்டு சொற் பொழிவுகளையும் கேட்க நாலாயிரம் பேர் வந்திருந்த னர், உள்ளுர் மாவட்ட முன்சிப்பும். ல பட்டதாரி களும் கூட சொற்பொழிவுகளை கேட்டனர். முதற் பேச்சு நடராஜ தத்துவம் பற்றியது. இதனைச் சில கருவி களைக் கொண்டு விளக்கம் செய்தேன். இரண்டாவது பேச்சு பக்தி யோகத்திற்கு சண்டேஸ்வர நாயனாரது பங்கு' என்பது பற்றியது. இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பேசி முடித்தேன்' எனக் குறிப்பிட்டு இருந் தார். இந்த இரு சொற்பொழிவுகளும் 1-4-1893ல் நிகழ்த் தப்பட்டவை. பத்தொன்பதாவது நாற்றாண்டின் இறுதி யில் தோன்றிய சைவ சமயப் புத்துணர்விற்கு மன்னரது பேருரைகள் பெரிதும் பயன்பட்டன. தமது சொந்த நகரான இராமநாதபுரத்தில் இருக் கும்பொழுது எல்லாம், பேரறிஞர் பாண்டித்துரைத் தேவ ரும், பிற அறிஞர்களும் மாலை நேரங்களில் மன்னரை அணுகி பயனுள்ள கலந்துரையாடலாக சமய இலக்கியப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு பொழுது போக்குவது வழக்கம் தமது குடும்பத்தாரிடத்திலும் பணியாட்களிடத்தும் சிவ நாமம், சிவபூசை, அனுபூதி பற்றிப் பேசாத நாள் அவ ருக்குப் பிறவாத நாளாகும். ஒருநாள் தமது பன்னிரண்டு 19. Madurai Mail - || 9-1-1895. 2O. Madurai Mail - 19–1-1995