பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நடந்து இராமேசுவரம் திருக்கோயிலுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் அப்பொழுது இருந்தது. பக்தர்களின் இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக இராமேசுவரம், இராமநாத சுவாமியையும், அம்மனையும் தனுஷ்கோடி தீர்த்த வாரிக்கு எழுந்தருளச் செய்து, பக்தர்களுக்குத் தரிசனம் வழங்கச் செய்தார். ஆனால், இத்தகைய புதுமைகளை நடைமுறை மாற்றங்களை-சமய ச் சடங்குகளை சரியான கண்ணோட்டமில்லாத கோயில் பணியாளர்கள் ஆதரிக்க வில்லை என்பதைப் பின்னர் அவர்கள் மன்னர் மீது எழுப்பிய புகார்களில் இருந்து தெரிய வருகிறது . . மேலும், இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ஆலயத் திலும், மற்றுமொரு முக்கியயான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். அந்த ஆண்டு நவராத்திரி விழாவிற்கு வருகை தருவதாக இருந்த சிருங்கேரி மடாதிபதியை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார். 1894ம் ஆண்டு இறுதியில், இராமநாதபுரம் அரண்மனை யில் நவராத்திரி விழா தொடங்கியது. பூரீ ராஜராஜேஸ் வரி அம்மன் திருக்கோயிலில் பிறப்பான அலங்காரங் கள், பூசனைகள், காப்புக்கட்டு, அபிஷேகம், அபய வக னம், மரகதபீட பூசை, அடுத்து பீரங்கி முழக்கம், அதிர் வேட்டுக்கள் வெடிப்பு, வாண வேடிக்கைகள், நாதசுர இசை, தேவரடியார் சதிர் ஆட்டம், அரண்மனை வாத் திய இசை, தேவார திருவாசக இசை, பண்டிதர்கள் வேதகோஷம், பொதுமக்கள், சமஸ்தான ஊழியர்களது வாழ்த்தொலிகள், குதிரைகள், யானைகள், வீரர்கள் அணி வகுப்பு மரியாதை, கொற்றக் குடைகள் தூக்க, கவரி,. வெண் சாமரம் விச, கட்டியம் முழங்க, வண்ண வண்ணத் தோரணங்களையும் லஸ்தர் விளக்குகளையும் அலங்காரக் கொடிகளையும் கடந்து, அரசர் இராமலிங்க விலாசம் அரண்மனை தர்பாரில் கொலு வீற்றிருத்தல், அவருக்கு முன்னால் விரிக்கப்பட்டிருக்கும் திட்டுச் சேலை யில் விழுந்து அவரது உற்றார் உறவினர்கள் தெண்ட னிட்டு வணக்கம் தெரிவித்தல். அடுத்து இராமநாதபுர சமஸ்தானத்தின் பல திருக்கோயில் குருக்கள் மார் அர 28. Diary Entry Dated. 29-10-1893.