பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சருக்குப் பிரசாதம் வழங்கல், சமஸ்தானப் பாடகரது இசைப் ப்ொழிவு, வேத விற்பன்னர்கள், தமிழ்ப் புலவர் கள், வாழ்த்துக்கள். பாராட்டு, தங்கதோடாக்கள்,சாதரா மாதாவி, பட்டாடைகள், பொற்கிழி, ஆகியவை பரிசி லாக வழங்குதல், பத்தாவது நாள் முற்பகல் அம்பு விடும் விழாவும் பிற்பாடு பந்தயங்களும் நடைபெறுதல் வழக்கம் பொதுவாக, இராமநாதபுரம் அரண்மனை நவராத் திரி-விழாவையொட்டி நடைபெறும் வழக்கமான நிகழ்ச் சிகள் இவை அந்த வருடம் சிருங்கேரி சாரதா-பிட முப்பத்துமூன்றாவது மடா:பதி ஜகத்குரு சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் சிறப்பு விருந் இனமாக நவராத்திரி பூஜைகளில் கலந்து கொள்ள வந்து இருந்தார். அத்துடன் முக்கியமான கடமை ஒன்றையும் நிறைவேற்றினார் அரண்மனை ஆலயத்தில் பிரதிட்டை செய்து இருந்த ராஜராஜேஸ்வரி அம்மன் சக்தியின் உக்கிர வடிவாக இருந்ததால், அம்மனுக்கு நித்ய பூஜை வாம மார்க்கத்தில் உயிர்ப்பவியுடன் நிகழ்ந்து வந்தது. பாஸ்கர சேதுபதிக்கு இந்த நடைமுறை உடன்பாடாக இல்லாததால் சிருங்கேரி-சுவாமிகளது உதவியை நாடி зкг пrri , சுவாமிகளும் உரிய பூஜைகளை மேற்கொண்டு புதிய பூர் சக்ரத்தை ஆலயத்தில் நிறுவி, அம்பிகையின் நித்ய பூஜையை வைதீக மார்க்க வழிபாடாக மாற்றி உதவினார் அம்மன் முன் இருந்த மரகத பீடம் அகற்றப் பட்டு பூ சிருங்கேரி மடத்துக்கு எடுத்துச் செல்லப்பட் டது. இந்த பீடம் ராய வேலூரில் இருந்து சேதுபதியின் தளகர்த்தர் தெய்வக் கன்னியால் கி பி. 1720-ல் கொண்டு வரப்பெற்று இந்தக் கோயிலில் நிறுவப்பட்டது. விழா முடிந்து, பத்தாவது நாள் பிற்பகலில் சங்கராச்சாரிய சுவாமிகளை வழியனுப்புவதற்காக அவர் தங்கி இருந்த "சங்கர விலாசம்’ விருந்தினர் மாளிகைக்கு, மன்னர் தமது மகன் ராஜராஜேசுவரனுடனும் பிரதானிகள், சமஸ்தான அலுவலர்களுடனும் சென்றார். ஜகத்குருவைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த மன்னர், திடீரெனத் தமது தலைப்பாகையையும் உடைவாளையும் கழற்றி, 29. The Miniature Hindu Excelsior Serial (1892)