54 சங்கராச்சாரியார் சுவாமிகளது பாதங்களில் வைத்து, տaուճ இந்தப் புனிதமான சேது சமஸ்தானத்தை, காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இதனைத் தங்களுக்குத் தானமாக-வழங்கிவிட்டேன்' என மிகுந்த பணிவுடன் கூறிக் கைகட்டி வாய் புதைத்து நின்றார். தமது ஆணைச் சக்கரத்திற்கு உட்பட்ட விண்ணையும், மண்ணையும் தமது இரண்டு அடி கோரி, வாமன னாக வந்த இறைவனுக்கு மாமன்னர் மாவலி வழங்கியதாகப் புராணம் கூறுகிறது. ஆனால், இந்த அரசர் தமது அரும் பொருள் அனைத்தையும் கொடுத்து முடிந்த பிறகு எஞ்சி யுள்ள தமது நாட்டையே சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு குரு தட்சினையாக வழங்கியது வரலாறு. அப்பொழுது அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தினால் அதிசயித்து நின்றனர். சுவாமிகளும் சில வினாடிகள் மெளனமாக இருந்தார்.பிறகு, “நல்லது மன்னரே! உங்களது விண்ணப் பத்தை அங்கீகரித்தோம்' என பதில் சொல்லிவிட்டு, இளவரசர் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்கத்தை அவர் அருகில் வருமாறு அழைத்தார். அவர் அருகில் சென்று சுவாமிகளைப் பணிந்து நின்றார். இதோ! தங்கள் தந்தையார் எமக்குத் தானமாக வழங்கிய இந்த சமஸ் தானத்தை நாம் உமக்கு வழங்கி விட்டோம்' எனப் புன்முறுவலுடன் கூறி, அரசரது அலங்தாாத்_தலைப் பாகையையும்_உடைவாளையும்-இளவரசருக்கு அணி வித்து ஆசிகள் கூறினார்ே s *T* சில நிமிடங்களில் நாடகம் போல் நிகழ்ந்த இந்த அற்புத நிகழ்ச்சியைக் காணும் பாக்கியம் பெற்று இருந்த அனைவரும் அதிசயமும் ஆனந்தமும் எய்தினர். இந்தச் சிறந்த நிகழ்ச்சியுடன் அந்த ஆண்டு நவராத்திரி விழா முடிந்தது. என்றாலும் மனநிறைவு பெறாத மன்னர், சங்கராச்சாரியார் அவர்களுக்கு புல்லங்குடி முதலிய ஆறு கிராமங்களை, பின்னர் வழங்கினார் எனத் தெரி கிறது. மற்றும், இராமநாதபுரம் நகரின் மேற்குப் பகுதி 30. நஞ்சன் கோடு பூர் கண்ட சாஸ்திரிகள்.ஏ சிருங்கேரி ஜகத்குரு சச்சிதானந்த அபிநவ நரசிம்ம_பாரதி சுவாமி.கிளுழுகரித்திரம் - பக்கம் 261-262.
பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/51
தோற்றம்