பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மதுரையில் நடைபெற்ற முதலாவது தென்னித்திய-அர சியல் மாநாட்டின் வரவேற்பு குமுத் தலைவர் என்ற முன்றியில் மாநிாEடின் (இரண்ட்ானது நிாள்) நிறைவு விழாவில் அங்கு குழுமி இருந்த தமிழகத்தின் பல பகுதி களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவுவதான தமது முடிவினை அறிவித்தார். அவர்கள் அனைவரும் தேவர வர்களது தொண்டிற்கு ஆதரவுக் குரல் கொடுத்தனர். இதன் தொடர்பாக மதுரை மாநகரில் 14.9.1901 ல் நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்றது. மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற் கனவே நிறுவிய சேதுபதி உயர்நிலைப் பள்ளி அரங்கில் தமிழ் இலக்கியச் சுவடிகளைத் தேடித் திரட்டிப் பாது காப்புச் செய்யவும், அவைகளை அதன் மூலம் தமிழை வளர்க்க ஆவன செய்வதற்கும், இந்த அமைப்பு செயல் பட பாஸ்கர சேதுபதி மன்னர் பல்லாற்றலாலும் உதவி வழங்கினார். செந்தமிழ்ச் செல்விக்கு எடுக்கப்பட்ட இந்தச் சீர் மிகு தமிழ் விழா, திருவிழா பயனும் பொலிவும் பெற சிவகெங்கை, புதுக்கோட்டை தஞ்சை அரசர் பிரதிநிதி கள் கலந்து கொண்ட போதிலும் பாஸ்கர சேதுபதி மன்னர் அவர்கள் தமது பரிவாரம் சூழ முன்னதாகவே மதுரைக்கு வந்திருந்து விழா நிகழ்ச்சிகள் அனைத் திலும் நேரில் பங்கு கொண்டு சிறப்பித்தார். அந்த நிகழ்ச்சியின் பொழுதே, சங்கம் சிறப்புற ரூபாய் பத் தாயிரம் வழங்கித் தமது ஆதரவைத்_தொனத்தார். இந்த இணையற்ற விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச் சிப் பெருக்கில் திளைத்த புலவர் பெருமக்களில் சிறந்த நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள், சங்க இலக் கியத்தை நினைவூட்டு வண்ணம், இந்த விழா நிகழ்ச்சி யினை ஆற்றுப்படை-இலக்இயமாகப் படைத்தார்.3° இந்த நூலில், மதுரைச் சங்க அமைப்பிற்கு பாஸ்கர சேதுபதி மன்னர். 32. மகாவித்வான் குலாம் காதிறு நாவலர்-புலவர் ஆற்றுப்படை (1968) வரி 155-59