பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O வேம்பத்துார் வேம்பு ஐயர் என்ற பெரும்புலவர், தமிழில் இருபொருள்பட்பேசுவதில், பாக்களைப் புனை வதில் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்குச் சிலேடைப்புலி என்ற பட்டமும் உண்டு ஒருநாள் அவர் மன்னரது அவைக்கு வந்தார். அப்பொழுது புலவர்கள் பகுதியில் இருந்த அனைத்து இருக்கைகளிலும் புலவர்கள் நிறைந்து இருந்தனர். செய்வது அறியாது ஒரு நிமிடம், அவர் மலைத்து நின்றார். அவரை ஏளனமாக ஒரு புலவர், 'வேம்பு-நிற்பதுதான் இயல்பு' என்றார். _ |-- * நிலைமையைப் புரிந்த மன்னர் புலவரை அழைத்து தமக்கு அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்து அவரைப் பெருமைப் படுத்தினார். மகிழ்ச்சியால் திளைத்த புலவர்,'அரசு அருகில்தான் வேற்பு இருக்கும்' - = T--------> ----- -rーエ = என்று சிலேடையாகச் சொன்னார். (அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே வளரச் செய்வது தமிழக மரபு) புலவ ரது திறமையான பதில் அவையில் இருந்த அனைவரை யும் மகிழ்வித்தது. இந்த நவராத்திரி விழாவில் சேதுபதி மன்னர் வழங் கிய விலை உயர்ந்த சாதரா' என்னும் சிறப்பான இரண்டு பட்டாடைகளைப் பின்னர் திருவாவடுதுறை ஆதின் கர்த்தரிடம்_கொடுத்து அதற்கு விலையாக ஆதினத்தார் அளித்த ருபாய் முன்னுறையும் சிலப்பதி கார' பதிப்புச் செலவிற்குப் பயன்படுத்தியதாக டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப் பில் குறித்துள்ளார்கள். ே யாழ்ப்பாணத்திலிருந்து வந்த விவசம்புக் கவிராயர் என்ற பெரும்புலவர், இத்தகைய நவ பாத்திரி கலை விழா வின் பொழுது 'பாஸ்கர சேதுபதி கல்லாடக் கலித் துறை', 'பாஸ்கர பதிகம்” “பாஸ்கர சேதுபதி இரட்டை மணிமாலை'. சேதுபதி நான்மணிமாலை ஆகிய சிற்றி லக்கியங்களைப் படைத்து அரங்கேற்றி மன்னரை அக மகிழும்படி செய்தார். புலவர் அகங்குளிரும் வண்ணம் 36. சாமினா தையர் உ.வே - என் சரித்திரம் (1958) பக்கம் 474, 475