பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 அன்பளிப்புகளை வழங்கி, அவரை இலங்கைக்கு வழி யனுப்பி வைத்தார் மன்னர், பிறிதொரு முறை, பரிதி மாற் கலைஞர் என்று தனித்தமிழ்ப் பெயரைத் தமது இயற்பெயராக சூடியிருந்த பேராசிரியர், சூரிய நாராயண சாஸ்திரி என்ற புலவர், தமது நாடகப் படைப்பான 'கலாவதி'யை மன்னரது அவையில் நிகழ்த்தி அரங்கேற்றியதற்காக அணியும் மணியும் பரிசி லாக வழங்கி பாராட்டப்பட்டார். மேலும், கலைக்கட லாக வாழ்ந்த சென்னை சூளை புலவர் சோமசுந்தர நாயக்கருக்கு தங்கத்திலான "தோடா"வை வழங்கி "சைவ சித்தாந்த-சண்ட-மாருதம்” என்ற விருதையும் மன்னர் அவருக்கு அளித்தார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பான நிகழ்ச்சி ஒன்றினை மேற்கொண்டார் பாஸ்கர பூபதி 'தாயிற் சிறந்தவன் சேதுக்கதிபன்-தமிழர் பிரான்-வாயிற் சிற ந்த புலவ ன்' என்று தம்மை அடக்க மாகத் தெரிவிக்கும் மகாவித்வான் ரா. ராகவ ஐயங்காரை மதுரை_மாறுசூரில்-முத்துப்_பல்லுத்தில் வைத்து அவரைச் சுமந்து.-புலவரைப்-பெருமைபடுத்தினார். தமிழ் மொழிக்குத்தான் என்றும் தொண்டன் என்பதைப் புலப் படுத்தினார். வாரங்கல் மன்னன் இரண்டாம் பிரதாப ருத்திரன் மகாகவி கம்பனது பல் ங்கைச் சுமந்து அடைப் பம் அளித்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இந்த நிகழ்ச்சி, இத்துடன் அமையவில்லை. 9-11-1901-ல் மதுரை ஆவணப் பதிவு அலுவலகத்திற்கு அந்தப் புலவரை அழைத்துச் சென்று ஆண்டுதோறும் பல்லக்குச் செலவிற்கும் ஜீவியத்திற்கும் நிவேதனமாக ரூ. 635/பெறும் உரிமைப் பத்திரத்தையும் கைச்சாத்திட்டு பதிவு செய்து கொடுத்தார். தமது சமஸ்தானம் தமிழையே தனக்கு தாய் பாஷையாகவுடையதாதலால், எமது முந்தைய ராஜாக் கள் எல்லாம் பரம்பரையாகத் தமிழ் வித்வான்களுக்கு ஏராளமான உபகாரங்கள் செய்துள்ளது பிரசித்தமானது. சேர, சோழ பாண்டியர்களுக்குப் பிறகு, சுத்த தமிழ் அரசர்களாக சேதுபதிகளே, தமிழ்பா ஷா அபிவிருத்தி செய்பவர்களும், தமிழ் வித்வான்களை ஆதரிப்பவர்களும் v/