பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பாசமும் பொறுமையும் சங்கர விலாசம், இந்த மாளிகை இராமநாதபுரம் அரண்மனையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் தளபதிடமார்ட்டினது இல்லமாக இருந்த இந்த மாளி கையைச் செப்பனிட்டு, பாஸ்கர சேதுபதி மன்னர் தமது ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தி வந்தார். இந்த மாளிகையின் வடக்கிலும் மேற்கிலும் முகவை ஊரணி அமைந்து இருந்ததுடன் மாளிகை யைக் சூழ்ந்த தோட்டத்தில் பல விதமான பயன்தரு மரங்களும் மலர்க்கொடிகளும் நிறைந்து, இந் தச் சூழல் மிகவும் ரம்மியமாக இருந்தது. அங்கு வாழ்ந்த ஏராள மான மயில்களும் குயில்களும், கண்ணுக்கு அழகும் கருத்துக்கு இனி மையும் சேர்த்தன. மாளிகையின் முகப்பில் வரிசையாக பூந் தொட்டிகளில் பல விதமான வண்ண மலர்கள் புன்னகை செய்து கொண்டு இருந்தன. வாயில், ஜன் னல் கதவுகளில் சீனப்பட்டுகள் தொங்கின. சுவரில் பெரிய நிலைக்