பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 "நீலமேகம், எனக்கு மரணம் ஒரு நாள் உண்டு, அது உன் கையில் அல்ல என்பது இறைவனது சித்தம். ஆமாம் ஏன் இப்படி நடந்து கொண்டாப் I'. "மகாராஜா, உங்கள் உப்பைத் தின்று வளர்ந்த நான் உங்களையே ... ... (பேசமுடியாமல் சிறிது நேரம் தாம தித்து விட்டு) சமூகத்திடம் பதினைந்து வருஷமாக சேவ கம் பார்த்து வருகிறேன். பலன் எனது பெண்டு பிள்ளை கள் பட்டினி உலகத்துக்கெல்லாம் அள்ளிக் கொடுத்து உதவுகின்ற தாங்கள். இந்த அரண்மனையை அண்டிக் கிடக்கின்ற ஏழையை ஏறிட்டுப் பார்க்கவில்லை இந்த எண்ணம் என்னைப் பழிகாரன் ஆக்கி விட்டது . ஆத்தி ரத்தில் முட்டாளாகி விட்டேன். மகாராஜா என்னை மன்னித்து விடுங்கள்.” தேம்பித் தேம்பி அழுதான். சா ஷடாங்கமாக தரை யில் விழுத்தான். 'நீலமேகம், எழுந்திரு, உனது கஷ்டத்தை இதுவரை ஏன் சொல்லவில்லை. நானும் உன்னைப்பற்றி விசாரிக்க வில்லை தான்' மன்னரது பேச்சில் பரிவும் பாசமும் நிறைந்து இருந்தது. 'சாமிநாதா! நீலமேகத்தை தானாதிப்பிள்ளையிடம் அழைத்துச் சென்று இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்து அனுப்பு. "மகாராஜா மன்னித்து விடுங்கள் மீண்டும் நீல மேகத்தின் கெஞ்சுதல். வேண்டுதலுடன் சென்றான். மன்னர் அங்கு எதுவும் நடக்காதது போல அமர்ந்து இருந்தார். தன்னை கொல்ல வந்தவனை குறையையும் கேட்டு நிறைவு செய்த மகிழ்ச்சி அவருக்கு. இன்னா செய் தாருக்கும் இனியவையே செய்து முடிக்கும் சால்பு, அவ ரிடம் இயல்பாக இருந்தது. அவரது வாழ்க்கையில் நிகழ் வுற்ற இன்னொரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.