பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இந்தக் கடிதத்தில் இருந்து திவான் மீது வழக்கு கொடுக்க வேண்டிய அளவிற்கு அவர் தவறு செய்து இருந் தார் என்பது புலனாகின்றது. என்றாலும் அவருக்கு ஏற்பட்ட தொல் லை மன்னரது இளகிய நெஞ்சை மிகவும் பாதித்து விட்டது என்பதை அறியமுடிகிறது. தம்மிடம் பணியாற்றிய அலுவலருக்கு இக்கட் டான நிலையொன்று ஏற்படும்பொழுது, அவருக்கு இயன்ற உதவியினைச் செய்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற மனிதாபிமானம் எத்தனை பேருக்கு உள் ளது? அத்துடன் பகைவனுக்கும் அருள வேண்டும் என்ற பரந்த மனப்பா ன் மை கொண்ட வர் மன்னர் பாஸ்கரர். குணநலம் சான்ற கோமா னாகிய அவர் இத்தகைய அரிய பண்பாட்டி னை வளர்த்தார் அதில்ே வாழ்ந்தும் காட்டினார். இத்தகைய இனிய செயல்களினால் இளம் மன்ன ருக்கு ஏற்பட்ட இசையென்னும் புகழ்கண் டு புழுங்கியவர் சிலரும் அப்பொழுது இருந்தனர். 'அழுக் கற்று அகன் ருரு மில்லை .. ' என்ற வள்ளுவத்தை ம | ளாத பேதைகள், பினக்குகளை உருவாக்க முயன்றனர். வேறு வழி எதுவும் புலப்படாத நிலையில், அன்புத்த மையனுக்கு எதிரர்க அரு மைத் தம்பியைத் தேற்றினர். அள்ளி அள்ளிக் கொடுக்கும் மன்னரது பண்பினை எள்ளி நகையாடி, கொள்ளையைத் தடுத்து சமஸ்த்தானத்தைக் காப்பாற் றும் குலபதியாக விளங்க வேண்டும் என இளவல் தின கரைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரும் ஏற்றம் பெரும் செயலாக எண்ணி, சமஸ்தானத்தில் பாகப்பிரி வினை கோரி மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத் தார். அளவிலாத அன்புடனும் மரியாதையுடனும் ஒழுகி வந்த ஒரே தம்பியின் ஒரவஞ்சனை கண்டு மன்னர் திகைத்தார். என்றாலும், வழக்கின் முடிவு சூதர்களின் சூழ்ச்சிக்கு முதல் அடி வழங்கியது. வழக்கினை ஆய்ந்து தீர்ப்புரை அளித்த ஆங்கில நீதிபதி, இராமநாதபுரம் சமஸ்தானம் எப்பொழுதும் பிரிவினைக்குரிய சொத்து அல்ல என்று முடிவு சொல்வி 18-1893-ந் தேதியன், வழக்கினை தள்ளுபடி செய்தார்-தோல்வியுற்ற மனு தாரரைத் தேற்றி ஆறுதல் அடையச் செய்த சுயநலமிகள், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டைத்