பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தாக்கல் செய்யுமாறு செய்தனர். 5-9-1893-ந் தேதியன்று இந்த முறையீடும் தோல்வியுற்றது. தோல்வி மனப்பான்மை யும் பகையுணர்வும் மேலிட்ட இளவல் தினகரர் பெருஞ் செலவு செய்து அப்பொழுது லண்டனில் இருந்த பிரிவி கவுன் சில் என்ற மிக உயர்ந்த பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், இறுதி முறையீட்டைத் தொடர்ந்தார். அதுவரை, இந்த வழக்கினில் வெற்றிகள் கிட்டியபொழுதும், தமது உடன் பிறப்பின் தவறான போக்கினுக்காக மன்னர் மனங்கலங் கினார். வீணான பொருட்செலவு மட்டுமல்லாமல், தமது நீடு புகழ் சேது குடியினுக்கு ஏற்படும் பெரும் பழியாக இந்த வழக்கினை அவர் கருதினார். இதில் எவ்விதம் தீர்வு பெறுவது என்ற சிந்தனையில் அன்பும் பாசமும் நிறைந்த அவரது உள் ளம் அலைகட லாய் அமைதியற்றுக் குலைந்தது. ஒருவகையாகத் தம்பியை அழைத்து நேரடியாக பேசித்தீர்ப்பது என்ற முடிவிற்கு வந்தார் பெரும்பாதிப் புக் குள் ளா கியிருந்த தம்பியும் அண்ணனது அழைப்பை ஏற்று மன் ன ரைச் சந்தித்தார். மீண்டும் அவர்களிடையே பாச உணர்வுகள் படர்ந்தன. உடன் பிறப்பு என்ற உறவு புத்தொளி பெற்றது. வழக்கினை திரும்பப் பெற தின கரர் இசைந்தார். மன்னரும் அவருக்குத் தேவை யானவை களைச் செய்வதற்கு ஆவலுடன் முன் வந்தார். இராம நாதபுரம் கோட்டைக்கு-கிழக்கே_தம்பிக்கு தனியாக மாளிகை அமைப்பதற்குடது மடலுக்கடமனைடநிலமும் மற்றும் செலவுகளுக்குடருபாய்டஇரண்டரைடலட்சமும், மாதந்தோறும் செலவுகளுக்கு ரூபாய் இரண்டு ஆயிரமும் வழங்க மன்னர் முன்வந்தார். மன்னரது பெருந்தன்மை யினால் உடன்பிறந்தே கொல்லும் பிணியாகத் தோற் றிய பிள்ளை மை பேருவகை தரும் உடன் பிறப்பாக மாறிய து -T _ இதனையொத்த இன்னொரு இக்கட்டான வழக்கிலும் மன்னர் சம்பந்தப்பட்டு சஞ்சலம் அடைந்தார். இராம நாதபுரம் சமஸ்த்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்த மான பல திருக்கோயில்களில், த.மு.இந்துவில் உள்உஆபி கோயிலும் ஒன்று. அந்த ஊரின் மக்கட் பகுதியில் ஒரு