பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பிரிவினரான சாணார்கள். அப்பொழுது (சென்ற நாம் றாண்டில்) இருந்த சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர் களாக, தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். ஏனைய இந்து சகோதரர்களைப் போல, திருக்கோயி லுக்குள் சென்று இறைவனை வணங்கும் உரிமை அவர் களுக்கு மறுக்கப்பட்டு இருந்தது. பஞ்சமா பாதகங்களில் ஒன்றான குடியை வளர்க்கும் கள்ளினை வடித்து வழங் கும் தொழிலை அவர்கள் பராம்பரியமாகக் கொண்டிருந் கதால் இந்து சமய ஆகமங்கள் அத்தகையதொரு சமூகத் தடையை இந்தப் பிரிவு மக்கள் மீது புகுத்தி இருந்தது. நூற்றாண்டுகள் காலமாக சமூகத்தாழ்வையும் பிரிவினை யையும் ஆற்றாமையாக அனுபவித்து வந்த அந்த மக்கள் கால முதிர்ச்சியின் காரணமாக கிளர்ந்து எழுந்தனர். 14. 5. 1897-ல் கமுதியில் இந்த மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். அங்கிருந்த மீனாட்சி சுந்தரேசுவரர் ஆல யத்தில் புகுந்து அவர்களே வழிபாடு செய்தனர். கிருக் கோயிலின் புனிதத்திற்கு திட்டு ஏற்பட்டு விட்டதாக பக்தர்கள் துடித்தனர். ஆஸ்திகர்களும் அர்ச்சகர்களும் திரண்டு வந்து ஆலயக் கதவுகளை அடைத்து இளர்ச்சி செய்தனர். அந்தக் கோ யிலின் அறங்காவலரான பாஸ்கர சேதுபதி மன்னர் சார்பாக மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வன்முறையான நுழை விற்கு தடை விதிக்குமாறும் நடந்து விட்ட அடாத செயலுக்கு நஷ்டியாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கி உத்திரவிடுமாறும் வாதிகள் கோரி இருந்தனர். சைவசிந்தாந்தியும் சன்மார்க்க வா தியுமான மன்னர், இந்த வழக்கினால் மிகவும் சஞ்சலமடைந்தார். தமது குடிமக்களது ஒரு பகுதியினருக்கு சமூக நீதி மறுக்கப் படுவது அறிய மிகவும் வேதனையடைந்தார். அதே சமயம், தொன்று தொட்டு வருகிற நடைமுறைகளை இன்று நாடார் என அழைக்கப்படும் பிரிவினர்தான் இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை சானார் என வழங்கப்பட்டனர். அதற்கு முந்தைய ஆவணங்கள் சிலவற்றில் இந்த மக்கள் சான்றோர் எனவும் குறிப் பிடப்படுகின்றனர்.