பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 யெழுத்திட்டு புலவருக்கு அனுப்பி வைத்தார். தமது சமஸ்தானப் புலவர் பால் மன்னர் கொண்டிருந்த பெரு மதிப்பைப் புலப்படுத்துகின்ற இந்த இருவரிகள், அவர் பற்றி யொழுகிய சைவத்தையும் கடந்த நின்ற அன்புள் அாத்தை கோடிட்டு காட்டுகின்றன. இவரது குலதெய்வமான கொற்றவை ராஜராஜேஸ்வரி யின் ஆலயத்திற்கு பெரிய மணி இல்லாதது பெருங்குறை யாக இருந்தது. அதற்காக இத்தாலி நாட்டு மிலான் நக ரில் இருந்து மூன்று வெங்கல மணிகளை வரவழைத் தார். அவற்றில் ஒன்றை அரண்மனை அம்மன் ஆலயத் திலும், மற்றொன்றை திரு உத்திரகோச மங்கை ஆலயத் திலும், மற்றொன்றை இராமநாதபுரத்தில் உள் ள கத்தோலிக்க கிறித்துவ ஆலயத்திலும் நிறுவும்படி செய் தார். இன்றளவும் அந்த ஆலயமணிகள் நாள்தோறும் எழுப்புகின்ற இனிய நாதம் இறையுணர்வை நெஞ் சில் நிறைக்கும் அருஞ் சாதனமாகப் பயன்படுகின்றது. மேலும், இராமநாதபுரம் கோட்டைக்குள் உள்ள கோதண்ட இராமசாமி ஆலயத்தை திருப்பணி செய்தார், இதனைத் தெரிவிக்கும் கல்வெட்டு இணைப்பில் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த பெருமாள் ஆரோகணித்து அழகு பவனி வரும் தேரோட்ட திரு விழாவிற்கும் மன்னர் ஏற்பாடு செய்தார். வரட்டு வேதாந்தியாக மட்டும் வாழாமல் நடராஜ மூர்த்தியையும், நாராயண சுவாமி யையும் ஒரு சேர, ஒன்றிணைந்த பரப்பிரம்மமாக, பாவித்த அவரது மனப்பக்குவத்திற்கு இதைவிட சிறந்து எடுத்துக்காட்டு இருக்க முடியாது. மேலும், அவர் பிற சமயத்தாரைப் பேதமுடன் பார்க்காத பண்பாளர் என்பதை அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகள் சில புலப்படுத்துகின்றன. மிஸ் பிரித் என்ற ஆங்கில கத்தோலிக்க பெண்மணிக்கு சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து சிறப்பித்தார். இந்த மணவிழா தொடர்பாக தேவாலயத்தில் நிகழ்ந்த இரவு நேர பிரார்த்தனையிலும் அவர் கலந்துகொண்டார். இன் னொரு சிறப்புச் செய்தி. அந்த திருமணம் நிகழ்ந்த இரவு சிவராத்திரி இரவாகும். எனவே மன்னர் அன்று அந்த