பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருமணத்தில் முழுப் பட்டினியுடன் கலந்து கொண்ட தாகும் அதே ஆண்டு நாட்குறிப்பில், மன்னரது பொருளு தவியினால் இங்கிலாந்தில் பார் - அட் லா படிட் பை முடித்து சென்னை திரும்பிய, தானியல் (தஞ்சை) என்ற இளைஞர் சென்னையில் மன்னரைச் சந்தித்து நன்றி தெரிவித்ததும், காணப்படுகின்றது திருமதி ஹெச் சி. ஜில்வா என்ற ஆங்கிலப் பெண்மணி இராமநாத புரம் அரண்மனையின் கண்காணிப்பாளராக இருந்து தமது அறுபத்தைந்தாவது ஆண்டில் மரணம் அடைந்த பொழுது மன்னர் மிகுந்த மனவேதனை அடைந்ததுடன், அந்தப் பெண்மணி மீது கொண்டிருந்த பாசத்தின் அடை யாளமாக அவரை அடக்கம் செய்த இராமநாதபுரம் சி எஸ். ஐ. தேவாலய கல்லறையில் நினைவுக்கல் ஒன்றை யும் நாட்டி வைத்தார். அந்த தேவாலயத்திற்கு அழகிய சர விளக்கு ஒன்றையும் ஏற்கனவே மன்னர் வழங்கி இருந் தார். இன்றும் அந்த அழகிய விளக்கு உபயோகத்தில் உள்ளது. 'ஒக்கனாத்தொழ யாவையும் பூத்துக் காய்த்து ஒக்க நின்று ஒன்றாய் நிறைவானதே என்ற முகவையில் சித்திபெற்ற தாயுமான அடிகளது பொதுமை நோக்கு, இந்த முகவை அரசருக்கும் பொருந்தி ஏனைய சமய நெறிச் சார்பாளருக்கும் உதவி நின்றது. இராமநாதபுரம் சமஸ்தானத்தில் இன்னொரு பூர்வ குடிகளான இசுலாமியர்களும், இத்தகைய இனிய பண் பாளரிடம் பெருமதிப்பு கொண்டு இருந்ததில் வியப்பு இல்லை. ஏற்கனவே வள்ளல் சீதக்காதி காலம் முதல், வானது நானக்கொடையால் உலகை வளர்த்தருளிய சோனகர்களுக்கும் சேதுபதி மன்னர்களுக்கு மிடையில் நிலவிய நேச உணர்வுகள் இந்த மன்னர் காலத்திலும் நீடித்தன. இரு பெருஞ் செல்வத்தில் இணையற்று விளங் கிய இராமேசுவரம் இபுராகிம் மரைக்காயர் என்பவர் 39. இந்த நினைவுக்கல் சி.எஸ் ஐ. தேவாலய வளாக கல்லறையின் தெற்குச் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது