பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இந்த மன்னரது இனிய நேசராக விளங்கினார். இவர் ' வரமுறுஞ் சித்தாந்த வேதாந்த காவிய மதித்தினைத்" தினி துணர்ந்தொன்' என யாழ்ப்பாணம் சிவசம்புப் புலவரால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவர் இராமேசுவரம் நெடுஞ்சாலையில் உள்ள மண்டபம் கிராமத்தின் செல்வச் சீமானாக விளங்கிய அப்துல் காசிம்-மரைக்கறயர், இந்த மன்னரது அன்புத் தன்ன்ெனிகிட்டு அவரது குடும்பத்தில் ஒருவராக விளங்கினார். சேதுபதி மன்னர் மண்டபம் தோணித்துறையில் இருந்து படகில் இராமேக வரம் செல்லும் பொழுதும், அங்கிருந்து திரும்பும் பொழு தும், வழியில் உள்ள தமது இருப்பிடமாகிய மண்டபத் தி ல் மன்னருக்கு மிகப்பெரிய வரவேற்பும் மரியாதையும் வழங்கி பெரு விருத்து செய்வதைப் பெரும் பேறாக கருதி வந்தார் அந்த மரைக்காயர். பத்தொன் பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி. நமது நாட்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கப்பிடி இறுகத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி, கலாச்சாரம், சட்ட திட்டங்கள் என்று பல முகங்களில் அந்த ஆதி க்கம் இந்திய சமுதாயத்தை பயமுறுத்தியது வடமாநிலங்கள் இவற்றில் எதிரொலித்த (1857 ஆம் ஆண்டு) சிப்பாய்க் கலகம், அதன் தாக்கமாக அமைந்தது. இதனையடுத்து , இந்து சமயத்தின் பழம் பெருமையைப் பறைசாற்ற சுவாமி தயானந்த சரசுவதியும், அந்த சமயத்தின் அடிப் படைகளை அரித்துக் கொண்டிருக்கும் தீமைகளைக் களைந்து மறுமலர்ச்சி காண ராஜாராம் மோகன்ராயும் பாடுபட்டனர். ஆனால் இத்தகையதொரு விழிப்பும் எழுச்சியும் இணைந்த இயக்கம் எதுவும் தெற்கே இந்த து து கட்டத்தில் தோன்றவில்லை. ' கேரளத்தில் நாராயணகுருவும், தமிழகத்தில் வடலூர் வள்ளலாரும் இந்து சமயச் சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர்கள் தான் என்றாலும், இன்று அவர்களை எண்ணிப் பார்க்கும் வகையில், அவர்களது பணியும் பெருமையும் அப் பொழுது பரவி இருக்கவில்லை. 40. சிவசம்பு புலவர் - சிவசம்பு புலவர் பாடல் திரட்டு (இலங்கை)