பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 தம்மைவிட ஒரு துறவி மூலமாக அந்தக் கருத்துக்களை ஆங்கிலமொழியில் உலகப் பேரவையில் வெளியிடுவது இன்னும் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று எண்ணினார். அவரது எண்ணத்தை சுவாமிகளிடம் வெளியிட்ட பொழுது அவர் தயங்கினார். பத்தாயிரம் மைல் தொலைவு கடற்பயணம். முற்றும் புதிய சூழ்நிலையில், அறிமுகம் இல்லாத மக்கள் கூட்டத் தினர் இடையில் சொற்பொழிவாற்றுவது ... ஒரு கடின மான, புதிய அனுபவம்; என்றாலும் தமது தல யாத்திரை முடிந்தபிறகு அமெரிக்கப் பயணம் பற்றிய முடிவைத் தெரிவிப்பதாக சுவாமிகள் தெரிவித்தார். கொந்தளிக்கும் அலைகடலின் ஆரவாரத்திற்கிடையில், குமரிமுனையில், சிந்தையை அடக்கி, வந்தனை செய்து, நீண்ட தியானத் துடன், சுவாமிகள் தமது நாலாண்டுக்கால தல யாத்திரை யை முடித்துக் கொண்டு திரும்பினார். வழியில் சென்னை யில் பாஸ்கர சேதுபதி மன்னரைச் சந்தித்து அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளுவதற்கான ஒப்புதலை அளித்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னர் சுவாமிகளது பயனத் திற்குப் பொன்னும் பொருளும் வழங்கி பயண ஏற்பாடு களையும் செய்தார். சுவாமிகளும் பம்பாய்த் துறைமுகத் திலிருந்து (Peninsular) என்ற கப்பலில் 31-5-1893-ல் அமெரிக்கப் பயணத்தை தொடங்கினார். ஜூலை கடைசி வாரத்தில் சிகாகோ போய்ச் சேர்ந்தார்.49 சிகாகோ நகரில் அனைத்துச் சமயங்களின் பேரவை நடவடிக்கைகள் 12-9-1893 தேதியன்று தொடங்கின, அதில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் தாங்கள் ஏற் கெனவே தயாரித்துக் கொண்டு வந்த உரைகளைப் படித் தது சுவாமிகளுக்குப் புதிய அனுபவமாகத் தோன்றி யது.கி தாமும் தமது உரையை ஏற்கனவே எழுதி த் தயாரித்து வரத் தவறிவிட்டதற்காக சுவாமிகள் சஞ்ச 42 NATESAN M. S – Swami Vivekanantha, a sketch (1913) p. 12) 43. Swami Nikilananda - Swami Vivekananda a Biogra phy (1953) pp 107. 1 11.