பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 லம் அடைந்தார். என்றாலும், மனம் தளராது அந்தப் பேரவையில் இந்து சமயசாரம் பற்றிய உரையைச் சிறப் பாக நிகழ்த் தினார் செம்மையும் மென்மையும் நிறைந்த அவரது செழுமையான சொற்பொழிவு அங்கிருந் தோருக்கு ஒரு புதிய இனிய விருந்தாக அமைந்தது சிவப்பு மஞ்சள் நிற அங்கியும் இந்திய நாட்டுத் தலைப் பாகையும் கொண்ட அவரது எடுப்பான தோற்றம் அமெரிக்க மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இவைகளுக்கெல்லாம் மேலாக, சிக்காகோ நகரின் மிக்சிகன் சதுக்கத்தில் அமைந்திருந்த கலை அரங்கில் அவர் தமது கன்னிப் பொழிவினை, "அமெரிக்க நாட்டு சகோதர சகோதரிகளே என்று அன்புடன் தொடங்கிய உரை, அங்கு குழுமியிருந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச் சியை அளித்தது. அதன் வெளிப்பாடான அவர்களது ஆரவாரம், கரவொலி,கடல் ஒலியாக அதிர்ந்தது. பொது வாக, பொது மேடைகளில் சொற்பொழிவாற்றும் பேச் சாளர்கள் தங்களது பேச்சினை சீமான்களே, சீமாட்டி களே , கற்றுணர்ந்த சான்றோர்களே' என தொடங்கு வதுதான் அன்றைய மரபாக இருந்தது. சுவாமிகளது. தொடக்கம் மாறுபாடாக இருந்தாலும் மனத்தைத் தொடுவதாக அமைந்தது. அங்கு குழுமியிருந்த சான் றோர்கள் அனைவரையும் விட இந்தச் சாமியார், மேதா விலாசம் மிகுந்தவர் என்பது அவரது உரையினைக் கேட்ட மக்களது தீர்ப்பாக இருந்தது. 'நியூயார்க் ஹெரால்டு" போன்ற சிறந்த அமெரிக்க நாளிதழ்கள் சுவாமிகளை மிகப்பெரிய மேதையென வருணித்து வரைந்தன. சுவாமிகளும் அந்தப் பேரவையில் பதின் மூன்று நீண்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.4 ஆன்மீகத் தத்துவங்களின் திருவுருவாக நடமாடிய கவாமிகளுக்கு அமெரிக்க நகரங்கள் எங்கணும் ஆதரவும் இந்திய நாட்டு வேதாந்த தத்துவங்களின் பால் ஈடுபாடும் 44. French and Arvind Sharma – Religious Firmen tation modern India (1981) 60