பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 ஏற்பட்டன. அதனால், இராமகிருஷ்ணா மிஷன் என்ற பெயரில் இந்து சமயத் தொண்டு நிலையங்களை தமது ஆன்மீக குரு இராமகிருஷ்ண பரமஹம்ஸர் பெயரில் நிறுவிட பொன்னான வாய்ப்பு அவருக்கு கிட்டியது, நான்கு ஆண்டுக்கால வெற்றிப் பயணத்தை மேனாடு களில் சிறப்பாக முடித்து விட்டு நரேந்திரர் சுவாமி விவேகானந்தராகத் தாயகம் திரும்பினார். கொழும் புத் துறைமுகத்தை அடைந்த சுவாமிகள், யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து தென்மேற்குத் திசையில், இராமநாத புரம் சேதுபதி மன்னரது துறைமுகமான பாம்பனுக்கு 20-1-1897 அன்று வந்து சேர்ந்தார். முன்னதாகவே அந்த ஊருக்கு வந்து இருந்து சுவாமிகளுக்கான வர வேற்பு ஏற்பாடுகளில் முனைந்து காத்து இருந்த பாஸ்கர சேதுபதி மன்னர் பாம்பன் துறையில் தமது பரிவாரங் களுடனும், பக்த கோடிகளுடனும் பிரம்மாண்டமான வரவேற்பு ஒன்றை வழங்கினார். பரிதியின் ஒளியும் சென்றிடாத பரங்கியர் நாடுகளில் பாரதத்தின் மெய் யொளி பரப்பி வந்த, அந்தத் தத்துவ வித் தகர து வர லாற்றுச் சிறப்புமிக்க வருகையைக் குறிக்கும் நினைவுச் சின்னம் ஒன்றையும் மன்னர் அங்கு திறந்து வைத் தார்.46 படகில் இருந்து கரையிறங்கிய சுவாமிகளது புனித பாதங்களுைடதமது _தலையிலே வைத்து கரையிறங்கு மாறு-மன்னர் வேண்டிக் கொண்டார். இந்தியத் திரு நாட்டின் சாந்தியும் சமாதான மும் நிறைந்து ஆன்மீகக் செய்தியினை சப்த சாகரங்களுக்கும் அப்பால் எடுத்துச் சென்று, பாரத நாட்டின் ஆன்மீகச் சிறப்பை மேலை நாடுகளில் செழித்து வளரச் செய்த திருவடிகள் அவை என போற்றிப் பணிந்தார். 7 45 V.R and Sons. Madras-Almorah (1923) P.49 46. — do — 47. BASU. S.P And Ghush. S.B. Vivekananda in Indian News papers (1969) p. 134.