பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O ஒம் : சத்தியமே வ ஜெயதி :

வேதாந்த நெறியை மேலைநாட்டில் பரப்பிய பெரு வெற்றிப் பரணியுடன் வருகைதந்த சுவாமி விவேகா நந்த ரது புனித பாதது.ாளி இந்திய மண்ணில், முதலில் பட்ட இடம் என்பதன் நினைவாக, மன்னர் சேதுபதிபால் நிர் மாணிக்கப்பட்டது இந்த நினைவுச் சின்னம்’ என் ம வாசகங்கள் வடித்த வெள்ளைப் பளிங்குக்கல் ஒன்று கடற்கரையில் நிறுவப்பட்டது, சுவாமிகளது இராமதாக புரம் சமஸ்த்தான வருகை, மன்னரை எலலையில்லாக இன்பக் கடலில் திளைக்கச் செய்தது என்பதை இந்த நினைவுச் சின்ன வாசகம் நினைவூட்டுவதாக உள்ளது. வாய்மையே வெல்லும்” என்ற பொருளில் சத்தியமேவ ஜெயதே' என்ற உபநிடத வாக்கினை, மங்கலச் சொல் லாக தேர்வு செய்த இந்த மன்னரது சிந்தனையையும் சிலத்தையும் எங்ங்னம் போற்றுவது? இந்த நிகழ்ச்சிக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர், கி.பி. 1947ல் இந்திய குடியரசும் தமிழக அரசும் தங்களது அரசு இலச்சினை யில் அதே மங்கலச் சொற்களை இணைத்து வழங்குவர் என யாரும் அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செம்மையான சிந்தனையையும் செயலையும், எழுச்சி கொள்ளச் செய்ய, வாய்மையின் வலிமையை விட வேறு என்ன இருக்கிறது என்பதை கண்டறிந்த கல்விக் கடல் அல்லவா மன்னர் பாஸ்கரர்.

பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட பொட்டு வண்டி யில் சுவாமிகள் ஏறி அமர்ந்தவுடன் அதில் பூட்டப்பட்டி. ருந்த மாடுகளை அவிழ்த்து விடுமாறு உத்திரவிட்டு, அந்த வண்டியை அவரும் அவரது பரிவாரங்களும் பாம்பன் அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். சுவாமிகளிடம் மன்னர் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் மரியாதை யையும் புலப்படுத்த இதைவிட வேறு நிகழ்ச்சி எதனை யும் குறிப்பிடத் தேவையில்லை. அங்கே மூன்று நாட்கள் சுவாமிகள் ஒய்வாகத் தங்கி இருந்தார். தமது அமெரிக்க பயணத்தை மேற்கொள்ளச் செய்து, இந்திய நாட்டுத் தொன்மையையும், இந்துமதப் பெருமையையும் புக ழே ணிக்கு உயர்த்திய புரவலர் பாஸ்கர சேதுபதி மன்ன