பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 ர்ையும் அவரது பேருபகாரத்தையும் மறக்காமல் பாம்பன் துறைமுக வரவேற்புரையில் மனம் நெகிழ்ந்த்வராக குறிப்பிட்டுப் பேசினார் சுவாமிகள். “......... . இராமநாதபுரம் அரசருக்கு எனது இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவிப்பது இயலாத காரியமாகும் இந்த அடியவனால் ஏதாவது தொண்டு நிறை வேறி இருக்குமானால், அதற்கு இந்த நாடு, இந்த நல்ல மனிதருக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளது. ஏனெனில் சிகாகோவிற்கு நான் செல்ல வேண்டும். என்ற கருத்தை எனது சிந்தனையில் திணித்து அதனை அடிக்கடி வலி யுறுத்தி, என்னை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தது அவர் தான். இவரைப் போன்று இன்னும் ஐந்தாறு அரசர்கள் நமது அருமைத்தாய் நாட்டின் மீது அக்கரை கொண்டு ஆன்மீகத் துறையின் சீரமைப்பிற்குப் பாடுபட வேண்டும் என விழைகிறேன்." ஆன்மீக வைதிக வாதங்களில் மன்னரும் சுவாமி களும் ஈடுபட்டு இருந்தனர். பாம்பனிலும், இராமேசு வரத்திலும் அளிக்கப்பட்ட வரவேற்புகளை விடப் பன் மடங்கு சிறந்த வரவேற்பு சுவாமிகளுக்கு இராமநாத புரத்தில் அளிக்கப்பட்டது. சுவாமிகள் திருப்புல்லாணி ஆதிஜ்ெகந்நாதப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று விட்டு மாட்டுவண்டியில் பயணம் செய்து சக்கரக் கோட்டை கண்மாயை படகில் கடந்தும் (25 1-1897) தேதி மாலையில் இராமநாதபுரம் வந்து சேர்ந்ததார் கோட்டையில் பிரங்கிகள் முழங்கின. வாணங்கள் விண் னில் வெடித்தன. மன்னரைப் போல மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு சுவாமிகளை ஊர்வல மாக சங்கர விலாசம் மாளிகைக்கு அழைத்து வந்தனர். இராமநாதபுரம் பொதுமக்கள் சார்பாக சங்கர விலாசத் தில் ஆங்கில வரவேற்பு மடலினை சுவாமிகளுக்கு மன்ன ரது இளவல் தினகர், வாசித்து அளித்தார். அதற்குப் பதிலுரைக்கும் பொழுது, முன்னர் பாம்பனில் கூறிய புகழுரைகளை மீண்டும் சுவாமிகள் குறிப்பிடத் தவற வில்லை. மேலை நாடுகளில் நமது சமயத்திற்கும், நமது தாய் நாட்டிற்கும், இந்த அடியவனால் ஏதாவது தொண்டுகள் தொடரப்பட்டு இருக்குமானால் அந்த