பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 உடனே தமது கழுத்தில் அணிந்து இருந்த நவகண்டி மாலையைக் கழற்றிப் பாகவதருக்கு அன்பளிப்பாக வழங் . זוז זה ה& அவரது கரங்கள்தான் அந்த மாலையைக் கொடுத் ததே தவிர, அவரது உயிர் ஏற்கனவே பாகவதர் பாடிய அந்த மோகன ராகத்தில் இழைந்து, குழைந்த இசையில் கலந்து விட்டது 'பாட்டகத்து இசையாகி' எனத் தேவாரம் பாடுகின்ற உயிர் ஊட்டும் தெய்வீகக் கலை யான இசை, பாஸ்கர சேதுபதி மன்னரைப் பொறுத்த வரையில் அவரது புனித உயிரைத் தெய்வீக நிலைக்கு எடுத்துச் சென்ற உந்து கருவி என்றுதான் குறிப்பிட வேண்டியதாக உள் ளது. மரணமில்லாப் பெரு வாழ்வு வேண்டும் என விழைந் தார் வடலுார் வள்ள லார் அவ்விதமே சித்தி வளாகத்தில் முத்தி பெற்றார் அந்தப் பெருஞ்சித்தர். ஆனால் மன்னர் மற்றவர்களைப் போலத் தம்மையும் சாதாரண மனித ராகவே கருதினார் தமது 1893ம் ஆண்டு நாட்குறிப்பில் தமது வாழ்க்கை இலக்குகளைக் குறிக்கும்பொழுது எவ் வித உபாதையுமின்றி மரணத்தில் தமது வாழ்வை முடித் துக்கொள்ள வேண்டும், அதுவும் தமது அளவிடற்குரிய அன்புக்கும் மரியாதைக்குமுரிய அண்ணன் வள்ளல் பாண்டித் துரைக்கு முன்னர் இறந்து விட வேண்டும் என்ற விருப்பங்களைக் குறித்து வைத்து இருந்தார் அல்லவா ? இறைவனது கருணை யினால் அவரது இரு விருப்பங்களும் அங்கு நிறைவேறி விட்டன. மன்னரது மறைவைக் கேள்வி யுற்ற சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் திருமடத்திற்கு விரைந்து சென்று, மன்னரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததுடன், மன்னரது உடலை சிங் கம்பட்டி மாளிகைக்கு எடுத்துச் சென்றார் பின்னர், உரிய பக்கு வத்துடன் இராமநாதபுரத்திற்கு அனுப்ப ஏற் பாடு செய்தார் பாஸ் கர சேதுபதி மன்னரது உடல் கல்வி டைக் குறிச்சியில் இருந்து மதுாைக்குக் கொண்டு வரப் பட்டது விரைவாக இராமநாதபுரத்திற்கு எடுத்துச் செல்லும் சாதனம் இல்லாத காலம் அது அப்பொழுது