பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மதுரைக்கும் மண்டபத்திற்கும் இடையில் அமைக்கப்பட் டிருந்த ரயில் பாதை வழியாக முதல் ரயில் மன்னரது உடலை இராமநாதபுரத்திற்கு எடுத்து வரப் பயன்படுத் தப்பட்டது.இந்த அளவிற்கு அன்றைய அன்னிய அரசாங் கம் விரைவாகச் செயல்பட்டு மன்னருக்குத் தமது கடைசி அஞ்சலியை இந்த உதவி மூலம் செ லுத்தியது, அன்றிலைப் பிரிந்த துணை போல வள்ளல் பாண்டித்துரைத் தேவரும் தமது உடன்பிறவாத தம்பி பாஸ்கர சேதுபதியின் மறை வால் துடியாய்த் துடித்தார். கதறிக் கண்ணிர் விட்டு அழுதார். முடிசார்ந்த மன்னரும் மற்றுள்ளோரும் முடி. வில் பிடிசாம்பலாவது உறுதிதான். என்றாலும், மனித இதயத்திற்குரிய இயல்பான வேதனையும் கவலையும் அவரது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து அன்பின் முதிர்ச்சியால் பீறிட்டுக் கவிதைகளில் கொப்பளித்தன. இதோ அவரது இரங்கம் பாக்கள், சேதுபதி மன்னர் குலக் கடல் தோன்றி அருனனையோ சேர்ந்தோ ராம் மேதினி எங்கனும் செலுத்தி இரவொழிந்த புகழொளியை விரித்துத் தேன் போற் ஒது பிரசங்க மழை உவந்து உதவு பாற்கர நீயொடுக்கும் காலம் ஈது கொலோ இன்னமும் நீ எப்துவையோ இரங்கி எமக்கு இசைத்திடாயே "என்னாவி உளங்குளிர அண்ணாவென்று அன்போடு இனி எனை யார் சொல்வா ள் மன்னா மன்னா மன்னா! என யாரை _ யான் இனிமேல் மதித்துச் சொல்வேன் பொன்னா டுந் தொழும் சேது நன்னாடு ' புரந்தளிக்கப் போந்த நீ வேறு என்னாடு சென்றனையோ. எங்கள் குல மணி விளக்கே! இசைத்தி டா யே! : _ 49. மகா வித்வான் மு. ராகவ ஐய்யங்கார்-தமிழ்வளர்த்த தேவர்கள் (162) பக்கம்