பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மன்னரது குடும்பம் மாவை சூடிய மனைவியர் இந்திய சமூகத்தில் மன்னர்களும் குறுநிலக்கிழார்களும்பலதார மனங் களை மேற்கொள்ளுதல் நீண்ட நெடுங்கால வழக்கமாக இருந்து வந்துள்ளது. சமுதாய நலன் கருதி யும் மற்றும் அரசியல் சூழ்நிலை களுக்கு ஏற்றதாகவும் இந்தத் திருமணங்கள் அமைந்திருந்தன. சோழர்களது வழியினரான செம்பி நாட்டுக் கிளையைச் சேர்ந்த சேது பதிகளும் அந்த மரபினைப் பின் பற்றி பல மங்கையரை மனைவி களாக ஏற்றனர். மன்னர் பாஸ்கரர் இராமநாதபுரத்திற்கு அண்மையி லுள்ள களரி. துரைசிங்கத் தேவர் மகள் மங்களேஸ்வரி நாச்சியாரை யும் துாவல் கண்ணுச்சாமித் தேவர் மகள் சிவபாக்கியம் நாச்சியாரை யும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டார். மன்னருக்கு ஏற்ற இந்த மனைவி களில் மங்களேஸ்வரி நாச்சியாருக்கு மகப்பேறு கிட்டவில்லை. என்றா இலும் இரண்டாவது மனைவி