பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 ஆங்கிலத்திலும் தமிழிலும் அரிய புலமைபெற்று இருந்த தால் இராமநாதபுரம் மை அரசியலை மிகச் சிறப்பாக நிர்வகித்து வந்தார். இளவல் முத்து ராமலிங்க சேதுபதியின் சுவீகாரம் பற்றிய வழக்குகள், உறவினரது சூழ்ச்சிகள் ஆகியவைகளுக்கிடையில் தமிழ் புலவர்களை வரவேற்று மகிழும் சிறந்த பண்பும் அவருக்கு இருந்தது. இதனால் மக்கள் இவரது அவையை போஜராஜனின் சபையாகவே கருதி வந்தனர் புலவர்களை சாதுர்யமான வினாக்களின் மூலம் வியப்படையச் செய்து அவர்களது புலமையை சோதிப்பது போல, அவர்களது வறுமையை யும் உணர்ந்து, அவர்களுக்குப் .ொன் னும் பொருளும் வழங்கி உதவினார். அஷ்டாவதானம் சரவணப் பெரு மாள் கவிராயர். பழனி மாம்பழ கவிச் சிங்க புலவர், மகா விக் துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை தாண்டவராய சுவாமிகள், மகாமகோ பாத்தியாய இராஜ சாஸ்திரிகள், தில்லையம்பூர் சந்திர சேகரக் கவிராயர்,இடைய கோட்டை திருப்புகழ் தட்சினாமூர்த்தி ஆகிய பெரும் புலவர்கள் அவரது கொடையிலே குளிர்ந்து மகிழ்ந்தவர்கள். சைவ சமய சூடாமணியான யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர் களைக் கொண்டு திருக்குறள் பரிமேல் அழகர் உரை, திருக்கோவையார் உரை, சேது புராணம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம் ஆகிய நூல்களை ஏட்டுச் சுவடிகளில் இருந்து முதன் முறையாக அச்சில் பதிப்பித்து உதவினார். இராமநாதபுரம் வைத்தியர் முத்துக் கருப்ப பிள்ளையைக் கொண்டு ஆயுர்வேத மருத்துவ முறை களைத் தொகுத்து வைத்திய சார சங்கிரகம் என்ற பெய ரில் பதிப்பிக்கச் செய்தார். மேலும் பல்வேறு சமயங் களி ல் புலவர்கள் பாடிய தனிப்பாடல்களை தில்லையம் பூர் சந்திரசேகர கவிராயரைக் கொண்டு திரட்டி "தனிப் பாடல் தொகுதி” களாக முதன்முறையாக வெளியிட் டார். தமிழ் புலவர்களது பாடல்களின் தொகுப்பாக மட்டும் இல்லாமல் தமிழகத்தில் புலவர், புரவலர்களை தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்கும் உரிய சிறந்த நூலாக இந்த திரட்டு விளங்குகிறது. இவ்விதம் பொன்னுச்சாமித் தேவர் அவர்கள் நிர் வாகியாக, தமிழ் புலவராக, பதிப்பாளராக, வள்ளலாக, மட்டுமல்லாமல் சிறந்த இசை மேதையாகவும் திகழ்ந்து