பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பத்து ஆண்டுகள் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் கெளரவ திவானாக திறமையாற்றிய பின்னர், கிறிஸ்த் தவ. சமயத்தைத் தழுவி தமது எழுபத்திரண்ட்ாவது வயதில்_இயற்கை-எய்தினார். - தோற்றம் : 26-4-1871 மறைவு ! | 1-8-1942 உடன்பிறவாத தமையனார் மன்னர் பாஸ்கர ரது பெரிய தந்தையான பொன்னுச் சாமித்தேவரது மைந்தர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் பாஸ்கரரை விட வயதில் ஒராண்டு முதியவர். எனினும் உள்ளத்தால், உணர்வால், உத்தமமான செயல்களினால் இருவரும் ஒற்றுமை உடைய இயல்பினராக விளங்கினர். கலை, இலக்கிய ஈடுபாடு இசைப் புலமை மொழிப் பற்று சைவ சித்தாந்தம், வள்ளண்மை, ஆகிய அனைத் தும் இருவருக்கும் பொதுவானவை. பாண்டித்துரைத் தேவர் தமிழ் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண் டிருந்தார். இரவு, பகல் என்ற பேதமில்லாது தேவர் அவர்களது சோமசுந்தர விலாச மாளிகை இசைக் கலைஞர்களாலும், இன்தமிழ் புலவர்களாலும், நிறைந்து வழிந்தது. கந்தபுராணம், கம்பராமாயணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் என்று எத்தனையோ தமிழ் இலக்கியங்கள் பற்றிய வித்தகர்களது ஆராய்ச்சித் திற னையும் அருந்தமிழ் தேர்ச்சியையும் நயந்து கேட்டு வியந்து போற்றும் வண்ணம் இலக்கிய விருந்து அடிக்கடி அங்கு பரிமாறப்பட்டது. பட்டனம் சுப்பிரமணிய ஐயர், மகா வைத்தியநாத அய்யர், திருக்கோடிக்கா கிருஷ்ண அய்யர். தஞ்சை நாராயணசாமியப்பா, பூச்சி சீனிவாச ஐயங்கார் ஆகியோர் வள்ளல் அவையில் தேவகானம் பொழிந்துமகிழ்வித்தனர். வள்ளல் அவர்களால் இவர்கள் அனைவரும் பாராட்டும், பரிசும் பெற்றனர். பாண்டித்துரைத் தேவர் அவர்களது தன்னேரில்லாத தமிழ் பணியாக அமைந்தது 14.09-1901 ல் மதுரையில் நிறுவிய தமிழ்ச்சங்கம். அந்நியர் ஆட்சியில் அவலத்துக்