பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மன்னரது மக்கள் பாஸ்கர சேதுபதிக்கு இரண்டு ஆண் மக்கள் பிறந் தனர். மூத்தவர் இராஜேஸ்வர முத்துராமலிங்கம், இரண் டாமவர் இராஜாராம் பாண்டியன். இராஜேஸ்வரர் பாஸ்கரருக்குப் பின்னர் இராமநாத புரம் சமிஸ்தான்ாதிபதியானார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும், வல்லவராக விளங்கிய அற்புத மனிதர் இவர் கம்பீரமும் கவர்ச்சியும், இவரது தோற்ற த் தில் கலந்து இணைந்திருந்தது. இவரைக் காணப் பெற்ற வர்கள் மூவேந்தர்களில் ஒருவர் இவர் தானோ' எ ன எண்ணுமாறு அழகும் அருளும் பொருந்தியவராக விளங் கினார். தந்தையைப் போல சிறந்த வள்ளலாகவோ, சைவ சித் தாந்தியாகவோ இல்லாவிட்டாலும், சிறந்த தமிழ் புலவராகவும், புலவர்களைப் போற்றும் புரவல ராகவும் விளங்கினார். மகா வித்து வான் ரா. ராகவ அய்யங்கார், மகாவித்துவான் உ வே. சுவாமிநாதய்யர் ஆகியோர் சேது மன்னரது சீதளக் கொடையால் செந் தமிழைச் செழிக்கச் செய்தனர். சிலப்பதிகார நூல் பதிப்பிற்கு இவர் உதவியதை. அந்த நூலின் முக வுரையில் உ. வே. சா. அய்யர் அவர்களது நெஞ்சின் நிறைந்த நன்றியினைக் காண முடிகிறது. மகாவித்து வான் இராகவ அய்யங்கார் தமது வஞ்சிமாநகர், என்ற ஆய்வு நூலினை மன்னருக்கு அர்ப்பணம் செய்துள்ள தி லிருந்து மன்னர் அவருக்கு உதவியதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதே புலவர் இந்த மன்னரைச் சிறப்பித்து ஒரு துறைக் கோவை என்ற செந்தமிழ் இலக்கியத்தை யும் யாத்துள்ளார். தமது தந்தையான பாஸ்கரரைப் போன்று நவராத்திரி விழாவினை ஆண்டுதோறும் கலை விழாவாக இராமநாதபுரத்தில் சிறப்பாக நடத்தி புலவர் களுக்கும் கலைஞர்களுக்கும், பொன்னாடைகளும், பரிசு களும் வழங்கி வந்த அந்த மன்னர் மதுரையில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் புரவலராக இருந்து பல்லாண்டுகாலம் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.