பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 'மதனி... மதனி... மதனியோய்! அம்மாள் சுந்தரம் அழுத்தம் திருத்தமாகத் தனக்கும் படிப்புக்கும் உறவு உண்டு என்று காட்ட விரும்பியவள்போல -உச்சரித்துக் குரலை உயர்த்திக் கூவினுள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவள் மதினி, ஏ மதினி: என்றுதான் குரல் கொடுப்பது வழக்கம். கொஞ்ச நாட்கள்-அடேயம்மா! அவள் வாழ்வில் எவ்வளவு மாறுதல்களை விளைவித்துவிட்டன. அவை: 'மதனி... மதனி... மதனியோய்!” என்று ராகம் போட்டாள் அவள். - - "நல்லாத்தானிருக்கம்மா நீ வாற வரத்துt ஏ. சுந்தரம், வரவர நீ சின்னப்புள்ளெ மாதிரி..." என்று வெடு வெடுத்தி படி வீட்டினுள்ளிருந்து வெளியே வந்தாள் மதனி என அழைக்கப் பெற்றவள். அகிலாண்டம் அவள் பெயர். பின்னே நான் என்ன பெரிய மனுஷியா, மதனி: என்று கொஞ்சிளுள் சுந்தரம்.

  • நீ என்ன செய்வே! பிள்ளை இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளி விளையாடிஞளும். அது மாதிரி..."

மதனியின் சிடுசிடுப்புக்கு நீர் கொட்டினுள் சுந்தரம், அது சரி. ஏன் மதனி கிழவன் அப்படி விளையாடினன்?" என்று குளுமைக் குரலில் கேட்டு. - எனக்கு உன்கூடப் பேசமுடியாதம்மா என்று அலுத்துக் கொண்டாள் பெரியவள். 'அதிருக்கட்டும், மதனி. மதினிங்கிறதைவிட மதனி என்று அழைப்பது அழகாக இருக்கின்றதன்ருே அரும்ை