பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠爱 மன்னிக்கத் தெரியாதவர் நான் ரயில் மாதிரி-எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி நடப்பதாக ஒருவர் சொல்வது வழக்கம். நீ என்னடான்கு இப்படிச் சொல்கிறே..." ‘ரயில் மாதிரி எப்படி நடக்க முடியும்?" அதாவது, வேகமாய்-ரொம்ப வேகமாய்... ஜிகுஜிகு ஜிகு-ஜிகு ஜி.குன்னு. . . . அவன் வெறும் சொல்லுடன் நின்றுவிடாமல், வேகமாக எழுந்து அதிவேகமாக நடந்து காட்டலானன். அப்பொழுது அவனே ஒரு விளையாட்டுப் பிள்ளை'யாகிவிட்டான். பேபிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து குனிந்து சிரித்தாள். தரையில் விழுந்து உருண்டு புரண்டு சிரித்தாள். சிரிப்பால் அவள் முகம் செக்கச் சிவந்தது, கண்களில் நீர் தேங்கியது, போதும் எார். . . வயிறு வவிக்குதே. . .போதுமே என்று சொல்விக் கொண்டு சிசித்தாள். - அவன் நாற்காலியில் அமர்ந்தான். அவள் எழுந்து அப்பா!' என்று ஆசுவாசப் பெருமூச்செறிந்தாள். அவளது சின்னஞ்சிறு உதடுகள் துடித்தன. இன்னும் சிரிப்பை அள்ளி அள்ளிக் கொட்டத் தயாராகும் அழகிய ஊற்று மாதிரி தோன்றியது அவள் வாய். "நீங்க ரொம்ப நல்ல ஸார்!’ என்று சொல்லிக்கொண்டு அவன்மீது சாய்த்தாள் பேபி. மாதவனின் ம ன ம் குறுகுறுத்தது, காந்திமதிக்குச் சொன்ன பதிலை-1 இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு நீ இப்படிச் சொல்லமாட்டாய் பெண்ணே! என்று-இவளிட மும் கூறலாம்போலிருந்தது. ஆயினும் அவன் ஒன்றும் சொல்லாமல் சிரித்து வைத்தான். "நீங்க எனக்கும் ஸாராக வரலியேன்னுதான் வருத்தமா இருக்கு என்று முனங்கிளுள் அவள். உடனேயே குதித்து எழுந்து, வெளியே துள்ளி ஓடினுள். .