பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 : மன்னிக்கத் தெரியாதவர் 'பசித்தால்தான் புசிக்க வேண்டும் என்பது சரியா?" என்று கேட்டான் சந்திரன் ஒரு சமயம். சரி என்று எப்படிச் சொல்வது? பசிக்கிறபோது சாப்பிடு வதற்கு எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படுகிரு.ர்கள் ரொம்பப் பேர். ஆகவே அகப்படுவதை எல்லாம்-அகப்படுகிற ப்ோதெல்லாம்-சாப்பிடுவதுதான் மனிதத் தன்மையாகும்’ என்று விளக்கம் கொடுத்தான் மாதவன். "பொய் சொல்வதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று சிறுவன் விசாரித்தபோது, மாதவன் அறிவித்தான்: பொய் சொல்லவேண்டியது அவசியம்தான். பொய் சொல்லாமலே எவனும் வாழ்ந்துவிட முடியாது. பொய் சொல்வது பாடம் என்பது சும்மா. பொய் சொல்லுவது தனித் திறமையாகும். அதனல் கற்பனை வளரும். பொய் தான் கலைகளுக்கே ஜீவாதாரம். , .' இந்த விதமாக அவன் சிறுவனுக்குப் புதுமுறைப் பயிற்சி அளித்து வந்தான்! பையன் அணில் பிள்ளையைக் குறி வைத்துக் கல்லெறிந்து கொல்வதில் ஆர்வம் காட்டினன். மாதவன் அவனைத் தடுக்கவில்லை. அது தவறு என்று போதிக்கவுமில்லை. - அணில்களே மட்டும் அடிப்பதுடன் உன் வேட்டை நின்றுவிட வேண்டாம். குருவிகளையும் குறி பார். கொல்ல முடிந்ததை எல்லாம் கொல்லு. இப்படிப் பயிற்சி பெற்றுக் கொண்டே வந்தால் என்றைக்காவது ஒருநாள் நீ சிங்கம், புலி முதலியவற்றைக்கூடக் கொல்லும் திறமை பெற்றுவிடுவாய்' என்று உற்சாகப்படுத்தின்ை. மாதவனின் பயிற்சி உண்மையிலேயே புதிய முறையில் தான் அமைந்திருந்தது. சின்னப் பையனுக்கு இயல்பாக உண்டாகக்கூடிய துஷ்ட குணங்களை எல்லாம் குறும்புத்தனங் கள்-கோளாறுகள்-ஆசைகள்-வெறித்தனங்கள் முதலிய பலவற்றையும் அவன் ஆதரித்தது மட்டுமல்ல; அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சிக்காமல், ஓங்கி வளருவதற் குத் தேவையான தாண்டுதல்கள்-அளித்து வந்தான்.