பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩露 மன்னிக்கத் தெரியாதவர்

  • நல்ல காரியம் செய்தே, பேபி" என்று அவன் பாராட் டினுள்.

பெரியவங்க என்னை வாயாடி, போக்கிரி என்று சொல் ருங்களே! என்று குறை கூறினுள் அவள். உண்மையைச் சொல்றவங்களை இப்படித்தான் ஏசுவார் கள். அதற்குப் பயந்துதான் முக்கால் வாசிப்பேர் உள்ளதை உள்ளபடி சொல்வதற்குத் தயங்குகிருர்கள்.” - "நான் பயப்படவே மாட்டேன்’ என்று திடமாக அறி வித்தாள் பேபி. "பேஷ்! துணிச்சல்காரி: என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான் மாதவன். இந்த முறைகள் பலவும் சிறிது சிறிதாகத் தம் வேலையை நிறைவேற்றும் என்பதை அவன் உள்ளம் தெரிந்து கொண்டது. எனக்கு அவசரம் எதுவுமில்லை. யார் எதற் காக அவசரப்படவேண்டும்?' என்று எண்ணிஞன் அவன். பலேச்சந்திரனுக்குப் பல இடங்களையும் காட்டுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு மாதவன் நகர் நெடுகிலும் சுற்றி ஞன். தான் மட்டும் தனியாகவும் திரிந்தான். நகரத்தை யும், நகர மக்களின் வாழ்க்கை முறைகளையும், நாகரிகத்தின் போவித்தன்மைகளையும், சமூகத்தின் கோளாறுகளையும், மனிதரின் சிறுமை பெருமைகளேயும் ஆராய்வது அவனுக்குப் பொழுதுபோக்கு ஆயிற்று. நாகரிகப் பெருநகரம்-முரண்பாடுகளின் கொலு மண்ட பம். உயர்வு தாழ்வுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டி யும் காட்டாமலும் பாதுகாக்கின்ற களஞ்சியம். சகலவித மான பண்புகளும் பல்கிப் பெருக இடமளிக்கும் வளமான பண்னை. . . அதில் காலூன்றி விட்ட மாதவன் தனது எண்ணங்களே கம் ஆசைகளையும் பயிரிட்டு வெற்றிகரமான விளைவு காணத் தவித்தான். எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, அவனுடைய