பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மன்னிக்கத் தெரியாதவர் அந்தி வேளை. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெரு ஒன்றின் நடுவில் அவன் மெதுவாக நடந்து சென்ருன். அழகும் அமைதியும் நிறைந்த குறுகலான வீதி அது. திடீரென்று அவனுக்குப் பின்னல் சிரிப்பொலி வெடிக்கவும், அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த் தான். அருமையான கார் ஒன்று வந்தது. அது வந்த சத்தமே கேட்கவில்லே அவனுக்கு. அதனுள் பகட்டாக ஆடை அணிந்த ஒருவனும், ஒய்யாரி ஒருத்தியும் இருந்தார்கள். அவளிடம் அழகைவிட, கவர்ச்சி அதிகமிருந்தது. அவள் கண்கள் காந்த சக்தி பெற்றிருந்தன! மாதவன் விலகாமல் அவள் முகத்தையே பார்த்தபடி நின்றுவிட்டான். ஏ மடையா, வழியை விட்டு விலகு, ஏன் இப்படி முழிச்சபடி நிக்கிறே? என்று கத்தினுன் காரில் இருந்தவன். அவள் மீண்டும் சிரித்தாள். பைத்தியம் போலிருக்கு' என்று அவள் முணுமுணுத்தாள். அது மாதவன் காதுகளிலும் பட்டது. - அவன் பாதை ஒரம் சென்ருன். நின்று, சூடாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று தீர்மானிப்பதற்குள் கார் வேகமாக நகர்ந்தது ‘ம ைட ய ன்! பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்க்கிறமாதிரி ... கார் ஒட்டியவ னின் பேச்சு பூராவும் நன்கு காதில் படாதவாறு அமுக்கியது அலங்காரியின் கலகலச் சிரிப்பொலி. மாதவனுக்கு ஆத்திரம் பொங்கியது. பணத்திமிர் படைத்த வீணர்களே!’ என்று கத்தினன். காரில் இருந்த வர்களுக்கு அது கேட்டிருக்குமோ என்னவோ, அவனுக்குச் சிறிது திருப்தி ஏற்பட்டது. - ரோடு கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் சொந்தமோ? நடந்து போகிறவன் எப்பவும் தரித்திரம் பிடித்த-மகா மோசமான-ஒரத்திலேதான் போகவேண்டு மாக்கும்?. மடையளும் அந்தப் பயல் பேசிவிட்டான். அவளுக்கு இளிப்பு தாங்கவில்லை. அவள் அவனுடைய மனைவியோ, இல்லை வேறு யாருமோ காமவெறி பிடித்த