பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#so மன்னிக்கத் தெரியாதவர் அவர்கள் நடிக்கும் நடிப்பை எல்லாம் காணும் வாய்ப்பு பெற்ற மாதவன் பணத்துக்கு இருக்கிற மதிப்புதான் என்னே என்னே! என்று எண்ணி, மனசால் சிரிப்பது வழக்கம் . அவன் அந்த இடத்தில் குறைந்தது ஆறு மாத காலமாவது தான் தங்கியிருக்க வேண்டும்; தனது வளர்ச்சிக்கு வகை செய்யக்கூடிய புதிய இடம் வருவதற்கு முந்தி இதைத் துறந்து விடக்கூடாது என விரும்பியதால், பவானந்தத்தின் குறை பாடுகளை எல்லாம் பெரிதுபடுத்தவில்லை. பவானந்தம் அநாவசியமாக அவன் விஷயங்களில் தல்ை யிடவுமில்லை; பாலச்சந்திரன் மாதவனைப் பற்றிக் குறைகூறவு மில்லை; அவனது மேற்பார்வையில் பொழுதுபோக்க நேர்ந்த தற்காக வருத்தப்படவில்லை; அதற்கு மாருக அவனுடைய ஆனந்தம் அதிகரித்தே வருகிறது என்பதைப் புரிந்து கொண் டார் அவர். அப்புறம் தாம் தலையிட்டுக் குட்டை குழப்பு வதற்கு என்ன இருக்கிறது என்றே அவர் கருதினர். ஒருநாள் மாலை தோட்டத்தில் பெரியவர் தற்செயலாக மாதவனச் சந்திக்க நேர்ந்தது. பாலச்சந்தர் உன்னைப்பற்றி ஆகா ஊக’, என்று புகழ்கிருன், பேபிசுட உன்னிடத்தில் அபாரமான பிரியம் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே" என்ருர், சிரித்தார். பிறகு அவராகவே சொன்னர்: "நான் நீ-உன்னே' என்றெல்லாம் சொல்வதற்காக நீ வருத்தப்படமாட்டாய் என்று நினைக்கிறேன். உனது சுய. மாரியாதையை அது பாதிக்கிறதாக நீ நினைக்கக்கூடாது. உன்னை நான் வேலையில் வைத்திருப்பதனுல் இப்படிப் பேசுவ தாக நீ எண்ண வேண்டாம். எனது சுபாவமே இதுதான்.” அவர் அப்படியும் இப்படியும் நடந்தார். பிறகு நின்ருர். "ஒவ்வொருவனுக்கும் சுயமரியாதை இருக்கவேண்டியது. தான். அதை எப்படிப் பாதுகாப்பது என்பதும் தெரிய வேண்டும். அதைவிட முக்கியமான பாயின்ட் ஒன்று உண்டு. சுயமரியாதையை எப்பொழுது இழக்கலாம், எதற்காக விட்டுக்கொடுக்கலாம் என்றும் அறிந்திருக்கவேண்டும். ஒரு காரியத்தைச் சாதிப்பதற்காக அந்தரங்கததில் ஒருவன் தனது,