பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈懿 மன்னிக்கத் தெரியாதவர் பதார்த்தங்கள் எல்லாம் அநேகமாக வட நாட்டிலிருந்து இறக்குமதியானவைதான். அல்வா, ஜிலேபி, ஜாங்கிரி, மைசூர்பாகு, குலோப்ஜாமூன் பார்த்தியா, பேர்களே சொல்லவில்லையா இவை தமிழ்நாட்டுச் சரக்குகள் இல்லை என்று. லட்டு. . . லட்டுகூட வெளியே இருந்து வந்ததுதான். எனக்குத் தெரிந்தவரை அப்பம்- ஐ மீன் தேட் அதிரசம் தான் தமிழ் நாட்டிலேயே பிறந்தது. தென், தேட் பொரி உருண்டை. . . . "பூந்தி?’ என்று கேட்டு வைத்தான் மாதவன். "பூந்தி?...உ.ம்ம். பூந்தி. , யோசிக்க வேண்டிய விஷயம் தான்’ என்று கூறி மோவாயைத் தடவினர் பெரியவர்.

  • பத்தாசி, சுசியன், முந்திரிக்கொத்து இதெல்லாம் அசல் தமிழ்நாட்டுச் சரக்குகள் லார்!’

என்னது என்னது என்னது?’ என்று பரபரப்பு அடைந் தார் அவர். மாதவன் நிறுத்தி நிதானமாகச் சொன்னன். அவர் பையிலிருந்த காகிதத்தை எடுத்து, பென்சிலால் குறித்துக் கொண்டார். 'அவற்றை நான் தின்று பார்த்ததில்லை. கேள்விப்பட்டது கூட இல்லையே!...சரி. பார்க்கலாம். ..அப்புறம், வடை என்பது தமிழ்நாட்டு விஷயமல்ல. சாம்பார்கூட இங்கே உற்பத்தியானது அல்ல...' “எனக்கு அப்படித் தோனலே லார்!’ அதுக்கு நான் என்னப்பா செய்வேன்? ஆராய்ச்சி பேசுது அப்பனே, ஆராய்ச்சி பேசுது!’ என அழுத்தமாகக் கூறினர் பவானந்தம். -'உம்ம ஆராய்ச்சியைக்கொண்டு உடைப்பிலே போடும்' என்று உறுமியது அவன் மனக்குறளி. ஆயினும் அவன் அறிவு தடை விதித்தது. -