பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#Gf; மன்னிக்கத் தெரியாதவர் பணத்தை நான் எப்படியேனும் பெற்றே தீரவேண்டும்' என்று அவன் உள்ளம் ஆயிரத்தெட்டாவது முறையாக உருப்டோடும். இவ்வாறு வெறித்தனமான எண்ணத்தில் மூழ்கி மாதவன் தோட்டத்தில் ஒரு செடி அருகே நின்றபோது, ஒருநாள் பேபி அவனுக்குப் பின்னல் இவர் தான் பாலுவின் உச்சர். - ரொம்ப நல்லவர்னு நான் அடிக்கடி சொல்லலே, அவரே தான் என்று பேசியது கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். - பேபி அரிசிப் பற்கள் முழுவதையும் காட்டிக்கொண்டு நின்முள். அவளுக்கு அருகில் இனிய தோற்றமுடைய மங்கை ஒருத்தி நின்ருள். அவள் முகம் சிரிப்பின் அழகும் ஏற்று, அதிகமான கவர்ச்சியோடு திகழ்ந்தது. அவளுக்கு முப்பது வயசுக்குக் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். சற்றே அதிகமான சதைப்பிடிப்பு பெற்றிருந்த அவளே பருமனுனவள் என்று சொல்ல முடியாது; ஆனுலும் மெலிந்தவள். ஒல்லியானவள் எ ன் று கணக்கிடவும் இயலாது. அவள் உயரத்துக்கு அவ்வுடலின் வளர்ச்சி அமை வாகவும் எடுப்பாகவும் இருந்தது. அவள் அழகி. அதில் சந்தேகமில்லே. அழகுக்கு அழகு சேர்த்தது அவள் சிரிப்பு. ஆமாம். பேபி உங்களைப்பற்றி என்னிடம் சொல்லாத தாளே கிடையாது. அந்த ஸார் இன்னிக்கு இப்படி ஒரு கதிை சொன்னர், அப்படிச் செய்தார்-இதுபோல் ஏதாவது விஷயம் இருக்கும், அவள் உற்சாகமாகச் சொல்வதற்கு.? அவள் குரல் சன்னமாய், காதில் இனிமை சேர்ப்பதாய் இழைந்தது. மாதவனுக்கு அவளே பிடித்துவிட்டது. அவள் மனசுக்கும் அவனைப் பிடித்திருக்கத்தான் வேண்டும். இல்லை யேல் அவள் ஏன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும்? ஏன் காரணம் இல்லாமலே சிரிக்கவேண்டும்? ஏன் கண்ணிலே கண்ணிட்டு மீட்டுக்கொண்டு, பின்னரும் கண்ணுேடு கண் சேர்ப்பதில் ஆர்வம் உடையளாதல் வேண்டும்? பொருளில்லாப் பேச்சு பல பேசிப் பொழுது போக்குவதிலே ஏன் அவள் மகிழ்வு காட்டவேண்டும், -