பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் ப்ெண் 3 'அஞ்சு பிள்ளைக்குத் தாயாகிற வயசு ஆச்சி, குதிராட்டமா இருக்கிரு. இவ கெட்ட கேட்டுக்குப் படிப்பு வேறே வாழுது: சின்னப் பொண்ணுங்கிற நினைப்புத்தான் இவளுக்கு என்று அகிலாண்டம் புலம்புவாள். - சுப்பிரமணியன் ஒரு மாதிரியான ஆசாமி. அவன் ஏதோ ஒரு ஆபீசில் அட்டெண்டர் வேலை பார்த்து வந்தான். ஆளைப் பார்த்தாலே பையனுக்கு மறை கழன்றிருக்கு: என்று சொல்லிவிடலாம். எதிரே வருகிற பெண்களைப் பார்த்து, அவன் முழிக்கிறபோது-அவள் சிறிது நாகரிக மாய், ஸ்டைலாக இருந்துவிட்டால் அவன் நின்று திரும்பிப் பார்த்து விழிக்கையில், சே, என்ன இவன் இப்படியிருக் கான்! சரியான லூசுபோலிருக்கு!’ என்று தான் அருகில் உள்ள வர்கள் நினைப்பார்கள், அவனுக்கு மனைவியாக வந்து வாய்த்த சுந்தரம் சிறிது அழகாகவும் இருந்துவிட்டாள். ஐந்தாம் கிளாசு வரை படிக்கவேறு செய்திருந்தாள். அப்புறம் அவன் மகிழ்வுக்கு எல்லை ஏது? காணுததைக் கண்டுவிட்ட மாதிரி-கிடைக்க முடியாததை எளிதில் அடைந்துவிட்டதுபோல, அவன் திரிந்தான். அவள் கறுப்பாக இருந்ததுதான் அவனுக்குச் சிறு வருத்தம் தந்தது. ஆலுைம், பரவாயில்லே, கவர்ச்சிகரமாக இருந்தாள். வசீகரமாக அழகு பண்ணிக்கொள்ளத் தெரிந்து வைத்திருந்தாள். தலைரோமத்தை ஒட்டப்படியும்படிசீவியும், இறுகித் தொங்கும்படி பின்னியும், விடாது சிலிர்த்து நெளி நெளியாய் வளைந்து சிங் கார மா ய் ஜிலுஜிலுக்கவிட்டு, இருளாடும் கண்களிலே தனி ஒளி எழில் ஆடவிட்டு, இதழ் திறந்து வெண்பற்கள் சிறு ஒளிகாட்ட இளமுறுவல் புரியும் போது, ஆகா, என்னே இவள் அழகு!’ என்று யாரும் சொக்கிப்போவது இயல்பு. சுப்பிரமணியன் அவள் அழகில் கிறங்கிக்கிடந்ததில் வியப்பு எதுவும் இல்லை. சுந்தரம் கிராமத்தில் பி ற ந் து வளர்ந்தவள்தான். அதனல் என்ன? நாகரிகமும், நவ யுகக் கலாசாரங்களும் மூலை