பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 翼翼罗 வசத்தா அவனைப் பார்த்ததும், காரை அவனருகில் கொண்டு வந்து நிறுத்தினள். ஏது இவ்வேளையில் பெட்டி யும் கையுமாகக் கிளம்பி விட்டீர்கள்? எங்கு பிரயாணம்?" என்று விசாரித்தாள். எங்கே போவது என்று எனக்கே தெரியவில்லை. திடீரென்று நான் நடுத்தெரு நாராயணன் ஆகிவிட்டேன்’ எனக் கவலை கொஞ்சமும் இல்லாத குரலில் பேசினுன் அவன். என்ன விஷயம்? பாலுவின் டீச்சர் என்ற பதவி என்ன ஆயிற்று? "நான் எதிர்பாராதவிதமாக அது என்ன வந்தடைந்தது: நான் எதிர்பாராத விதத்திலேயே என்னை விட்டுப் போய் விட்டது!’ "அப்புறம்!" "நானறியேன் பராபரமே என்று கூறிச் சிரித்தான் அவன். அவளும் ந ைக த் தாள். சரி. காரில் ஏறுங்கள். பெட்டியை பின்னல் வையுங்கள். முதலில் ஒரு ரெஸ்டா ரெண்டுக்குப் போவோம்’ என்று வசந்தா சொன்னுள். அருமையான யோசனை’ என்று ஆமோதித்தான் மாதவன். காரில் போகிறபோதே, நடந்த விஷயங்களை ஒருவாது கேட்டறிந்துகொண்டாள் அவள். உங்கள் போக்கு சுவாரஸ்ய மாகத்தான் இருக்கிறது. ஆளுல் இதே மாதிரிப் போனல் வாழ்க்கை என்ன ஆகிறது?’ என்று கேட்டாள். *. "அதைப்பற்றி வாழ்க்கை கவலைப்படட்டுமே! நான் ஏன் கவலைப்படவேண்டும்?' என்ருன் அவன். . அவன் பேச்சு புரியாததஞலோ அல்லது என்ன பதில் சொல்லுவது என்று தெரியாததேைலா, அவள் சும்மா சிரித்து வைத்தாள். எனினும் அவள் மனம் வேலை செய்து