பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ i23 மாதவன் சிறிது சிறிதாகப் பிரயோகித்த போதனைகள் சரியானபடி வேலை செய்தன. சம்பா, நீ ஏன் இப்படி இரண் டாந்தர, மூன்ருந்தர வேஷங்களையே ஏற்று நடிக்க வேண்டும்? கதாநாயகியாக நடிக்கும் ஸ்டார்கள் உன்னைவிட என்ன உயர்ந்துவிட்டார்கள்? அவர்களிடம் இருப்பதைவிட அதிக மான திறமையும், கவர்ச்சியும், இளமையும் உன்னிடம் இருக் கின்றன. நீ முதல்தர ஹீரோயின் ஆக நடிக்க முடியும். சுலபத்தில் ஸ்டார் ஆகிவிடலாம். நாமே படம் பிடிப்போம். அதுதான் சிறந்த வழி என்று அவன் கூறி வந்தான். அவளும் அதற்கு இசைந்தாள். மாதவனே ஒரு கதை எழுதினன். ஜனங்களின் ருசிகளை நன்கு அறிந்து வைத் திருந்த அவன், அவர்களைத் திருப்தி செய்யக்கூடிய முறையி லும், தன்னுடைய திறமையும் சம்பாவின் திறமையும் நன்கு சோபிக்கக்கூடிய வகையிலும், அருமையான கதை ஒன்றைத் தயாரித்தான். படம் வெற்றி பெறுவதற்குத் துணைபுரியக் கூடியவர்களின் உதவியை எல்லாம் தேடிப் பிடித்துப் பயின் படுத்திக்கொள்ள அவன் தவறவில்லை. இதற்குள், விடிவெள்ளி'யின் இரண்டாவது படமும் வெளிவந்து, வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்தது. மாதவன் நாட் குறிப்பு எழுதுவதில்லை. அப்படி எழுதினால், அதில்-பொன்னிற மை கிடையாததால்சிவப்பு மையால் பொறிக்கப்பட வேண்டியது என அவன் கருதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது ஒருநாள். மாதவன் கடைவீதியில் கார் அருகே நின்று கொண்டிருந் தான். சம்பா ஜவுளிக் கடைக்குள் சென்றிருந்தாள். வீதி யில் அவ்வளவாகக் கூட்டமில்லாத நேரம். மேலும், ரளிக மகா ஜனங்களால் முற்றுகையிடப்படக்கூடிய அந்தஸ்தை அவ்விரு வரும் இன்னும் பெறவில்லை. ஆகவே, அவர்கள் சாதாரணமாகக் கடைவீதியிலும் கடலோரத்திலும் காட்சி தர முடிந்தது. திடீரென்று அவன் பக்கத்தில் வந்து நின்ற ஒருவர் அவ இனக் கூர்ந்து கவனித்தார். வாய் பி ன ந் து நின்ருர்,