பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘器盒 மன்னிக்கத் தெரியாதவர் "என்னடே, நீ தானு: ஆளே ஒரே அடியா மாறிப்போயிட் டியே?’ என்று பல்லெல்லாம் காட்டிப் பேசினர். மாதவன் அவரைப் பார்த்தான். இறந்த காலத்தின் சாயை தன் முன் முளைத்து நிற்கிறதே என்ற வியப்பு பிறந்தது அவனுக்கு. சில வருஷங்களுக்கு முன்பு அவன் அளவிட முடியா அன்புசெலுத்திய காந்திமதியின் தந்தை சங்கரலிங் கம் பிள்ளைதான் அவர். பட்டணத்துக்கு ஏதோ கேஸ் விஷயமாக வந்திருந்தார். தற்செயலாக அவனைக் கண்டு விட்டார். - "ஆமாம். மாருமல் எப்படி இருக்க முடியும்? மாறுதல் வளர்ச்சியின் அறிகுறிதானே!" என்ருன் மாதவன். - "மாட்டு வால் வளர்ச்சியாக இருந்தாலும் சரிதானே?" என்று கிண்டலாகக் கேட்டார் பிள்ளை. - "என்னது?-வெடுக்கென்று தெறித்தது அவன் கேள்வி. மாட்டு வாலும் வளரத்தானே செய்யுது? கீழ்நோக்கி. அதைத்தான் சொன்னேன்’ என்ருர் பிள்ளை. - மாதவன் அதை அலட்சியப்படுத்தக் கருதி, பேச்சை மாற்றினன். காந்திக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?’ என்று விசாரித்தான். "ஓ! இரண்டு குழந்தைகள்கூட இருக்கு’ என்று பெருமை உாகச் சொன் ஞர் அவர். - 'ரெண்டு பிறந்துவிட்டதா? பேஷ் பேஷ்: அப்ப அவளுக் குக் குறை எதுவும் இராதுதான்! அவன் குரலில் பரிகாசம் தொனித்தது. . - .. போயும் போயும் நீ கூத்தாடியாக மாறுவேன்னு யாரும் எண்ணலேடே. நீ சொல்லாமப் புரய: மே வீட்டை விட்டு, ஊரைவிட்டு ஒடிப்போனதும், எங்காவது குளத்தி லேயோ, இல்லே ரயிலடியிலேயோ விழுந்து செத்திருப்பே அப்டீன்னு நெனச்சோம். பிறகு ஒருநாள் திடீர்னு நம்ம ஊர்க்காரன்லாம் உன்னைப்பத்திப் பேச ஆரம்பிச்சிட்டானுக, ஏதோ ஒரு படத்தைப் பார்க்கப்போன பயலுக, ஏய்-தம்ie