பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 129 கங்கே மின்னும் பொன் ஜரிகை வேலைகள் செய்தான் அவ்ற் றிலே. கம்பீரத் தோற்றமுடைய குதிரை ஒன்று வாங்கினன். கறுப்புநிறக் குதிரை, மினுமினுக்கும் உடல் வனப்பு. எடுப்பான வளர்ச்சியும் மிடுக்கான தடையும் பெற்றிருந்த அது சும் மா நடந்துபோனலே, எல்லோரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். அத்தகைய கவர்ச்சிபெற்ற அதிகான் குதிரை அது. அதன் நெற்றியில் எழிலான திலகம் போல சிறிது வெண்மை படிந்திருந்தது. - மாதவன் குதிரையேற்றம் பயின்று, தகுந்த தேர்ச்சி பெற்றதும், ஒருநாள் தனது புதிய ஆடையை அணிந்து கொண்டு குதிரைமீது பவனி வந்தான். பட்டனத்தின் முக்கிய வீ தி களி ல் எல்லாம் காணப்பட்டான். జ్ఞఊf நடமாட்டம் அதிக மு ள்ள இடங்களில் எல்லாம் அவன் ஜம்மென்று குதிரை சவாரி செய்தான். . எல்லோர் கண்களும் அவன்மீதே மொய்த்தன. தெருவில் நடந்தவர்கள் நின்று பார்த்தார்கள். வீடுகளில் வாசற் டி யில் நின்றவர்கள் ஆச்சரியமாகக் கவனித்ததோடு, உள்ளே யிருந்தவர்களுக்கும் செய்திகூற, ஜன்னல்களின் பின்னும் மொட்டை மாடிகளிலும் வேடிக்கை பார்க்கும் முகங்கள் ஆத்தன. - பிரமாதமான ஒர் காரியத்தைச் செய்துவிட்ட திருப்தி நிறைந்தது அவன் உள்ளத்திலே. அன்று முதல் மாலை வேளைகளில் அவ்விதம் பவ வருவதை வழக்கமாக்கிக் கொண்டான் அவன். - - அத்துடன் மாதவன் திருப்தி அடைந்துவிடவில்லை, அருமையான சாரட்டு வண்டி ஒன்று செய்து முடித்தான். ஜோரான இரண்டு வெண் புரவிகள் வாங்கினன். அவ்வண்டி யில் அவனும் சம்பாவும் உல்லாசமாக ஊர்வலம் வந்தபோது, எங்கும் ஏற்பட்ட பரபரப்பு: ஆகா, அதற்கு இணை அது தான். х - பழங்கால ராஜாக்கள் அணிந்துவந்தது போன்ற பகட் டான அங்கிகளை ரகம் ரகமான வர்ணங்களில், தயார்: 5