பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏蕙拿 மன்னிக்கத் தெரியாதவர் செய்துகொண்டு தாளைக்கொரு தினுசாகவும் வேளைக்கு ஒர் விதமாகவும் சிங்காரித்துக்கொண்டு காட்சி அளித்தான் அவன். - இவை எல்லாம் அருமையான சுய விளம்பரங்களாக உதவின. அவன் மக்களின் கவனத்தைக் கவர்ந்தான் . எல்லோர் பேச்சுக்கும் பொருள் ஆனன். மங்கையரின் தினைவிலே நிழலாடிஞன். எழிலிகள், ஒய்யாரிகள், உல்லாசி கள் பலரது உள்ளத்திலும் நீங்காத இடம்பெற்ருன். முதன் முதலாக சம்பளம் என்று இருநூறு ரூபாய் கிடைத்ததும், இந்தத் தொகையை எப்படிச் செலவு செய்வது என்று புரியாது திகைத்த மாதவன், இப்போது ஆயிரம் ஆயிரமாக வீசி எறிந்து கொண்டிருந்தான். பணம் நம்ம செலவுக்குப் போதவில்லையே, எவ்வளவு வந்தாலும் கட்டுபடியாகாது போலிருக்குதே! என்று வருத்தப்படவும் செய்தான். குமாரி சம்பாவும் அவனுக்கு ஏற்ற தோழியாகத்தான் விளங்கினுள். அவள் நாகரிக முறைகளிலும், அலங்காரக் கலையிலும் தலைசிறந்தவளாகி விட்டாள். அவள் செய்து கொள்ளும் சிங்காரிப்புகள் எல்லாம், அணிந்துகொள்ளும் ஆடை அணிகள் எல்லாம், வெகு விரைவிலேயே புதிய பாஷன்" என்று எங்கும் பரவின. இதளுலெல்லாம், குமாரி சம்பாவும் மாதவனும் நடித்த படங்களுக்கு அமோகமான ஆதரவு கிட்டியது. எல்லாம் வெற்றி! எங்கும் மகத்தான வசூல்! மாதவன் பணம் பெருகப் பெருக தாராளத்தனம் காட்டிஞன். பணம் என்பது செலவு செய்யப்படுவதற்காகத் தான். சேமித்து வைப்பதற்காக அல்ல' என்று கூறினுன் அவன். நாம் வாழ் தோடு மற்றும் பலரும் வாழட்டுமே என்று அவன் தர்ம ஸ்தாபனங்களுக்கும், சங்கங்களுக்கும். சேவா நிலையங்களுக்கும், பரோபகார விடுதிகளுக்கும், தகுதி பெற்ற தனி மனிதர்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் வழங்கினன்.