பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 翼密器 நின்றது. அதன் அருகே ஒரு ஒய்யாரி கவலைபடர்ந்த முகத் தோடு நின்ருள். அந்த முகத்தைக் கண்டதும் மாதவனின் உள்ளம் குது.ாகலித்தது. அவன் முகம் மலர்ச்சியுற்றது. வண்டியை அக் காரின் சமீபமாக-மிக மெது வாய்-செலுத்தும்படி அவன் சாரதிக்கு உத்தரவிட்டான். அவன் பார்வை அவள் முகத்திலேயே பதிந்து நின்றது. அவள் இமைகள் படபடத்தன. குழப்பத்தோடு, அவன் அப்படியும் இப்படியும் முகம் திருப்பினுள். சற்றே த்யங் கிள்ை. பிறகு அவன் முகத்தை நன்முக நேரே நோக்கினுள். அவன் யார் என்பது அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். ஆகவே அவள் முகம் பிரகாசம் பெற்றது. இதழ்களில் புன்னகை ஊர்ந்தது, நமஸ்காரம்’ என்று கரம் குவித்தாள் அவள். அவளே அந்நேரத்தில் அந்த இடத்தில் சந்திக்க முடியும் என மாதவன் எண்ணியதில்லை. அதே மாதிரிதான், சந்திக்க நேரிட்டால் அவளாகவே முன்வந்து பேசத்துணிவாள் என்று அவன் நினைத்ததும் கிடையாது. அவளைக் கண்டால் எப்படி அணுகலாம், எவ்வாறு பேச்சு கொடுத்து வம்புக்கு இழுக்கலாம் என்பது பற்றி எல்லாம் அவன் எண்ணத் தறியில் இழைகள் ஒடவிட்டுப் பொழுது போக்குவது வழக்கம்தான். ஆளுல், இப்போது அவன் திட்டமிட்டிராத முறையிலே ஒரு வாய்பபு கிட்டிவிட்டது. இனி அவனுக்கு மிகவும் செளகரியமான சந்தர்ப்பம் அது. அவன் முறுவல் புரிந்தவாறே வண்டியை விட்டுக் கீழே இறங்கினன். நமஸ்காரம்’ என்ருன். என்னை உங்களுக்குத் தெரிகிறதா?’ என்று கேட்டான் மாதவன். - பிரமாதமான ஹாஸ்யத்தைக் கேள்வியுற்றவள்போல அவள் கலகலவெனச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு: அவன் மறக்கமுடியாத-நினைவிலே நீங்காத வலிமையுடன் நின்று